திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பச்சை கலர் வாந்தி".. கதறவிட்ட "கஷாயம்".. பரிதாப ஷாரோன்.. க்ரீஷ்மா கேஸில் வெளியான முக்கிய தகவல்

ஷாரோனின் வழக்கு கேரளாவிலேயே நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை செய்யப்பட்ட வழக்கை, கேரளாவிலேயே தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்த நிலையில், ஷாரோன் இறந்துவிட்டார்.. கொலைக்குற்றவாளியும் அவரது காதலியுமான க்ரீஷ்மா, 2 விதமான வாக்குமூலங்களை போலீசாருக்கு தந்திருந்தார்..

அதேசமயம், தன்னுடைய இந்த திட்டத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என்று க்ரீஷ்மா கூறியிருந்தார்.. ஆனால், அவரது அம்மா, மாமா ஆகியோர், விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை அழித்திருக்கிறார்கள் என்பது உறுதியானதையடுத்து, அவர்களும் விசாரணை வளையத்துக்குள் முழுமையாக கொண்டுவரப்பட்டனர்.

காதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயம்.. துடித்து இறந்த ஷாரோன்.. கொலை வழக்கு தமிழகத்துக்கு மாற்றம்? என்னாச்சுகாதலி கிரீஷ்மா கொடுத்த கஷாயம்.. துடித்து இறந்த ஷாரோன்.. கொலை வழக்கு தமிழகத்துக்கு மாற்றம்? என்னாச்சு

 50 டோலோ

50 டோலோ

50 டோலோ மாத்திரை கலந்த ஜூஸ் பாட்டிலும், சாதாரண ஜூஸ் ஒரு பாட்டிலும் என 2 விதமான ஜூஸ் பாட்டில்களை, திற்பரப்பு அருவி தொடங்கி அவர்கள் தங்கிய லாட்ஜ்வரை, கையில் வைத்துக் கொண்டே திரிந்திருக்கிறார் க்ரீஷ்மா.. எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம், டோலோ மாத்திரை கலந்த ஜூஸை தந்து, ஷாரோனை குடிக்க வைக்கவும் முயற்சித்துள்ளார்.. ஆனால், அந்த ஜூஸை குடித்தும்கூட ஷாரோன் உயிர்தப்பியதால்தான், தாய்மாமனின் ஐடியாவை கேட்டுள்ளார் க்ரீஷ்மா.. அம்மாவும், தாய்மாமனும் சேர்ந்துதான், விஷத்தை கலக்கும்படி சொல்லி உள்ளனர்..

 லாட்ஜ்களில்

லாட்ஜ்களில்

அதற்கு பிறகு, அதாவது கடந்த 2-மாதத்திற்கு முன்பு, ஷாரோன் படிக்கும் நெய்யூரில் உள்ள கன்னியாகுமரி மருத்துவ மிஷன் சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு க்ரீஷ்மா சென்றுள்ளார். ஷாரோனை டாய்லெட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது போல் நடித்து, முதல்முறையாக குளிர்பானத்தில் காய்ச்சலுக்கான மாத்திரைகளை அதிக அளவு கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
ஷாரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் தொடர்ந்து 2-வது மாதத்தில் ஷாரோனின் கல்லூரி மற்றும் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் அழைத்து சென்று, 10 முறை இதேப்போல் மாத்திரைகளை ஜூஸில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறி போலீசாரை அதிர வைத்தார்..

 10 டோலோ

10 டோலோ

இதற்கு தேவையான மாத்திரைகளை திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் வாங்கினாராம்.. 10-முறையும் ஷாரோன் பாதிப்பின்றி தப்பியதால், அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.. கஷாயத்தில் விஷத்தை கலந்து தந்திரமாக காதலனை குடிக்க வைத்துள்ளார் க்ரீஷ்மா.. பச்சை கலரில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் ஷாரோன். கஷாயம் குடித்ததால் தான், அந்த கலரில் வாந்தி வந்திருக்கும், ஒன்றும் இல்லை சரியாக ஆகிடும் என்று சமாதானம் சொன்னதும், அப்படியே கண்ணை மூடி தூங்கிடு, ரெஸ்ட் எடு என்றும் பாசமாக சொல்லி சொன்னாராம் க்ரீஷ்மா. அத்துடன் ஷாரோனின் உயிரும் போய்விட்டது.

 ஹேண்ட்ஓவர்

ஹேண்ட்ஓவர்

க்ரீஷ்மாவிடம் பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கை எங்கு நடத்துவது என்ற குழப்பம் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது.. ஏற்கனவே, பாறசாலை போலீஸார் இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே விசாரணையில் முழுமனதோடு ஈடுபடவில்லை என்று ஷாரோன் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினார்கள்.. அதற்கு பிறகுதான், இந்த வழக்கின் விசாரணையை திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டது.. ஆனால், தமிழக போலீசாரிடம் இந்த கேஸை ஒப்படைக்க, ஷாரோனின் அப்பா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்..

டிரான்ஸ்பர்

டிரான்ஸ்பர்

காரணம், திருவனந்தபுரம் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கை சிறப்பாக விசாரித்து வரும் நிலையில், திடீரென இதன் விசாரணை மாற்றப்பட்டால் அது சரியாக இருக்காது என்றாராம்.. ஆனால், பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் நடந்திருப்பதால்தான், இந்த வழக்கை குமரி மாவட்ட போலீசுக்கு மாற்றப்படும் என்று முதலில் சொல்லப்பட்டது.. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசாரும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சட்ட ஆலோசனை கிடைத்தால் உடனடியாக தமிழகத்திற்கு மாற்றப்படும் என்று கேரள டிஜிபி அனில்காந்த்தும் தெரிவித்திருந்தார்..

 அலர்ட் 90

அலர்ட் 90

அதனாலேயே, இந்த கேஸ் தமிழ்நாட்டுக்கு விரைவில் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றத் தேவையில்லை என்று கேரள அட்வகேட் ஜெனரல் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனால் ஷாரோன் கொலை வழக்கை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரே தொடர்ந்து விசாரிப்பார்கள் என தெரிகிறது. மற்றொருபக்கம், கைது செய்யப்பட்ட கிரீஷ்மா, அம்மா சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்காக, 90 நாட்களுக்குள்ளேயே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Where is Sharon's murder trial going to take place, In Tamil Nadu or Kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X