திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று ஸ்டாலினுக்காக வந்தாரே.. பார்த்தீங்களா! டாப் நிர்வாகியை தூக்கியது காங்கிரஸ்.. சோனியாவிற்கு கோபம்?

Google Oneindia Tamil News

திருவானந்தபுரம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரளாவின் மூத்த நிர்வாகியான கேவி தாமஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இவரின் நீக்கத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட சிபிஎம் மாநாட்டிற்கும் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.

கேரளாவில் இருக்கும் கன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 9ம் தேதி அந்த விழாவில் கலந்துகொண்டு நீண்ட நேரம் உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கசியும் தகவல்கள்... கோட்டையில் எங்கு ஓட்டை... கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு கசியும் தகவல்கள்... கோட்டையில் எங்கு ஓட்டை... கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தேசிய அரசியல்

தேசிய அரசியல்

தேசிய அரசியலில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஆளுநர் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இதில் நீண்ட நேரம் பேசினார். மாநில மத்திய அரசின் உறவு மற்றும் உரிமைகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் இதில் பேசினார். இதில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை புகழந்து பேசினார்.

கலந்து கொண்டார்

கலந்து கொண்டார்

இந்த நிகழ்வில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேவி தாமஸ் கலந்து கொண்டார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியான சிபிஎம் மாநாட்டில், எதிர்க்கட்சியான காங்கிரசை சேர்ந்த கேவி தாமஸ் கலந்து கொண்டது சர்ச்சையானது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் கடுமையாக எதிர்த்தனர். கேவி தாமஸ் இப்படி செய்தது தவறு என்று குறிப்பிட்டனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிகழ்வில் கேவி தாமஸ் கலந்து கொள்ள கூடாது என்று ஏற்கனவே கேரளா காங்கிரஸ் அவருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் கேவி தாமஸ்.. நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். இந்த நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். நான் கலந்து கொள்வதில் என்ன தவறு? இது அரசியல் நிகழ்வு கிடையாது. முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியில் தானே இருக்கிறார். அதனால் நான் கலந்து கொள்வது தவறு கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆனால் கேரளாவில் காங்கிரஸ் சிபிஎம் இரண்டும் பரம வைரிகள் என்பதால் கேவி தாமஸுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எங்கே கேவி தாமஸ் சிபிஎம் கட்சியில் சேர போகிறாரோ என்ற கேள்வியும் எழுந்தது. எதிர்ப்பை மீறி கேவி தாமஸ் அன்று நடந்த நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்காக வந்து அந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அதோடு சிபிஎம் தலைவர்கள் பலரை தாமஸ் சந்தித்தார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

இது போக கேரளாவில் திரிக்காரா சட்டசபை தொகுதியில் நடக்க உள்ள இடைத்தேர்தலில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் ஜோ ஜோசப்பிற்கு நண்பர் என்ற முறையில் பிரச்சாரம் செய்வேன். நான் காங்கிரஸ் நிர்வாகிதான். காங்கிரசை விட்டு வெளியேற மாட்டேன். ஆனாலும் இடதுசாரி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வேன் நேற்று தாமஸ் குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே அவரின் பேச்சு கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் செயல் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி தாமஸின் செயலை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போதும் சோனியா காந்தியின் ஒப்புதலை அடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் உத்தரவின் தாமஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

நெருக்கம் காட்டினார்

நெருக்கம் காட்டினார்

முன்னதாக சிபிஎம் தலைவர்களோடு நெருக்கம் காட்டிய கேவி தாமஸ்.. முதல்வர் பினராயி விஜயனை பாராட்டி இருந்தார். அதில் விஜயன் சிறப்பாக செயல்படுகிறார். அவரின் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்தியாவின் சிறந்த முதல்வர்களின் ஒருவராக அவர் திகழ்கிறார். அவரின் கெயில் பைப்லைன் திட்டம் தொடங்கி பல திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன, என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

English summary
Why KV Thomas removed from Kerala Congress? Is CM Stalin's meeting a connection? காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரளாவின் மூத்த நிர்வாகியான கேவி தாமஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X