அதே கேரளா.. அதே பாணி! காருக்குள் கதறிய ‘மாடல்’! தோழியை சிக்க வைத்த தோழி! மிருகமான 3 பாய் பெஸ்டிகள்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது போலவே, தற்போது மாடலிங் பெண் ஒருவர் சீரழிக்கப்பட்டு இருக்கிறார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் எப்படி கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமா படபிடிப்பு முடிந்து காரில் திரும்பிய கேரளத்தின் பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு கடும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார். இந்த வழக்கில் மலையாளத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ய திலீப் சதித்திட்டம் தீட்டியதாகவும், நடிகை பாலியல் வழக்குடன், அதிகாரிகளை கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் திலீப் மீது பாய்ந்தது.

அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் அதே பாணியில் நடந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது காக்கநாடு பகுதியில் இருக்கும் அவர் அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார் .இந்நிலையில் இளம் பெண் தங்கி இருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாடலிங் பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் வசிப்போர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர் .அப்போது வீட்டில் இருந்து முனகல் சத்தம் கேட்கவே உள்ளே சென்று பார்த்த போது அந்த இளம் பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களோடு மயங்கி கிடந்திருக்கிறார். இதை அடுத்து அருகில் இருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

நள்ளிரவு பார்ட்டி
விசாரணையில் அந்த பெண் காரில் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ள இந்த இளம் பெண்ணுக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அவரும் மாடல் தொழிலில் தான் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம் பெண் கேரள இளம் பெண்ணை கொச்சி எம் ஜி சாலையில் இருக்கும் பிரபல மதுபான கூடத்திற்கு விருந்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

காரில் திட்டம்
அங்கு அந்த பெண்ணின் மூன்று பாய்பிரண்டுகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மூன்று பேரை ஏற்கனவே கேரளா இளம் பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த விருந்தில் ஐந்து பேரும் மது அருந்தி இருக்கிறார்கள். இளம் பெண் அளவுக்கு அதிகமாக குடித்து மயக்கம் போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணை வீட்டில் தாங்களே விட்டுவிடுவதாக இளைஞர்கள் கூற ஒரு காரில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றுள்ளனர். ராஜஸ்தானி இளம் பெண் மட்டும் ஹோட்டல் அறையிலேயே இருந்து விட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்
ஆனால் சொன்னபடி அந்த இளம் பெண்ணை வீட்டில் சென்று இறக்கி விடாமல் விடிய விடிய கொச்சி நகரின் பல இடங்களில் காரிலேயே சுற்றித்திரிந்து இருக்கிறார்கள். மேலும் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில் மீண்டும் அந்த ஹோட்டலுக்குச் சென்ற இளைஞர்கள் ராஜஸ்தான் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு காக்கநாடு பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டில் இறக்கி உள்ளனர். இதை அடுத்து தான் மறுநாள் காலையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த அந்த பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதிரடி கைது
இதையடுத்து அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த தகவலின் பெயரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். தொடர்ந்து அந்த கார் எங்கெங்கு சென்றது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நண்பர்கள் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான ஆதாரங்களை திரட்டும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications