ஊட்டி அருகே சொகுசு விடுதியை தேடி விருந்துக்கு போன யானை.. பல முறை கதவை தட்டி.. அடுத்து ட்விஸ்ட்
ஊட்டி: வீடு தேடி வந்த விருந்தாளியை விரட்டி விடாதீங்கப்பா.. எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் ஒருத்தனாவது வந்து திறக்குறானா பாரு.. கல் நெஞ்சக்காரனுங்க.. என்று கடுப்பில் ஒரு யானை காத்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நீலகிரியில் தனியார் தங்கும் விடுதியின் கதவுகளை தட்டியபடி ஒற்றை காட்டு யானை உலா வந்து கிலியை ஏற்படுத்தி உள்ளது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மற்ற எல்லா மாவட்டங்களையும் விட வித்தியாசமானது. தட்ப வெப்ப நிலை, காடுகள், மக்களின் கலாச்சாரம், விவசாயம் எல்லாமே வேறுபட்டது. தமிழ்நாட்டில் முற்றிலும் மலையில் உள்ள மாவட்டம் என்றால் அது நீலகிரி மாவட்டம் தான். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் இதமான கால நிலை நிலவும்.

ஏசியே தேவைப்படாத மாவட்டமாக நீலகிரி இருப்பது, பசுமையான காடுகள், வனவிலங்குகள், அருவிகள், நீரோடைகள், படகு சாவரிகள், பூங்காக்கள், தேயிலை தோட்டங்கள், முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டங்கள் என அங்கு பருவ நிலையே வேறு என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த பகுதியாக நீலகிரி மாவட்டம் இருக்கிறது.
இதன் காரணமாக உதவை, குன்னூர், கொடநாடு, கோத்தகிரி, கூடலூர் உள்பட நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரிசார்டுகள் அதிகமாக உள்ளன. வீடுகள், சொகுசு விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள்அதிக அளவில் கட்டப்பட்டடுள்ளன. வனப்பகுதி, மலைகள், தேயிலைத் தோட்டங்களை அழித்து சொகுசு விடுதிகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்படுவது கடந்த20 வருடங்களில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக யானைகளின் வழித்தடம் அளிக்கப்படுவதால் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.
இதன் காரணமாக மனித வனவிலங்கு மோதல் அதிகரித்து நீலகிரி மாவட்டத்தில் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை அளிக்கும் வகையில், தேயிலைத் தோட்டங்கள் நடுவே கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். தேயிலைத் தோட்டங்களை அழித்தும், மலையைக் குடைந்தும், பாறைகளை உடைத்தும் சொகுசு விடுதிகள் கட்டப்படுவதாகவும் புகார்கள் உள்ளது.
இதுபோன்ற காரணங்கள் மற்றும் யானைகள் வழித்தடம் அழிப்பு, யானைகள் செல்லும் வழிகளில் வீடுகள் கட்டிடங்கள் அதிகரித்துள்ளால், யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒன்றை காட்டு யானை ஒன்று லகிரியில் தனியார் தங்கும் விடுதியின் கதவுகளை தட்டியபடி நீண்ட நேரம் நின்ற வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவை பார்க்கும் போது, வீடு தேடி வந்த விருந்தாளியை விரட்டி விடாதீங்கப்பா.. எவ்வளவு நேரமா கதவை தட்டுறேன் ஒருத்தனாவது வந்து திறக்குறானா பாரு என்று யானை கேட்பது போல் இருக்கும். யானை ஒரு கட்டத்தில் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்வதாக வீடியோ முடிகிறது. காட்டு யானை நள்ளிரவில் சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications