வாழ்க்கையில் எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் முதுகு வலியே வராது.. திரில் சாகச பயணம்
சென்னை: வாழ்க்கையில் எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும். முதுகு வலி, மூட்டுவலி ஒன்றுமே வராது என்று கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜீப் ஒன்று அபாயகரமான முறையில் ஓட்டி பரிசோதிக்கப்பட்டது. அவ்வளவு மோசமான மலை சாலையிலும் வாகனம் சிறப்பாக கடந்து கீழே வரும் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளார்கள்.
பலருக்கு வாகனங்களில் பயணிப்பது பிடிக்கும். குறிப்பாக மலைச்சாலையில் சாகச பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். மலைச்சாலைகளை பொறுத்தவரை, சரியாக சாலை வசதிகள் இருக்காது. மிகவும் சவாலான முறையில் மேடு பள்ளமாக சாலைகள் இருக்கும். சில இடங்களில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடும். சில இடங்களில் மிகவும் பள்ளமாக இருக்கும். சில இடங்களில் மிகவும் செங்குத்தான பாதையாக இருக்கும். இப்படியான பாதைகளில் பொதுவாக டிராக்டர் மற்றும் ஜீப்கள் அதிகமாக செல்லும்.

குறிப்பாக ஜீப்கள் மலைகளில் அபாயகரமான சாலைகளில் அசால்டாக செல்லும். ஜீப்கள் என்றாலே மலைகளுக்குத்தான் என்றாகிவிட்டது. அந்த அளவிற்கு ஜீப்களும் மலையும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. கேரளாவின் தேக்கடி மற்றும் மூணாறை சுற்றியுள்ள கொழுக்குமலை தேயிலைக் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஜீப்பில் தான் போக முடியும். அதேபோல் கொடைக்கானலில் சில பகுதிகளுக்கு ஜீப்பில் செல்வதே சிறப்பானதாக இருக்கும். ஊட்டி மற்றும் மஞ்சூர் இடையே உள்ள வனப்பகுதிகளில் செல்லும் போதும் ஜீப்பில் செல்வதே சிறப்பானதாக இருக்கும்.
வாழ்க்கையில எல்லாரும் ஒருதடவை இதுல போயிட்டு வந்தா நல்லா இருக்கும். முதுகு வலி மூட்டுவலி ஒன்னும் வராது😂😂 pic.twitter.com/wQsNULADcb
— ராட்சசி 2.0 🐝🐝 (@imthattaan) August 28, 2024
இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மலை மற்றும் காடுகளுக்கு உள்ள பகுதிகளில் செல்ல ஜீப்தான் வசதியாக உள்ளது. ஜீப்களை பொறுத்தவரை அது எப்படி செல்லும் என்பது குறித்து அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் ஆஃப் ரோட்டில் போக வைத்து சோதிப்பார்கள். அப்படித்தான் ஜீப் ஒன்றை அனுபவம் உள்ள வாகன ஓட்டியை ஓட்ட வைத்து சோதித்துள்ளார்கள்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் செங்குத்தான பாதையில் தலைகீழாக வாகனம் வருகிறது. வரும் வழியில் ஜீப்பையே மூழ்கடிக்கும் வகையில் பள்ளங்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு பள்ளத்திலும் விட்ட பின்னரும் வாகனம் மேல்நோக்கி வருகிறது. இதை ஓட்டிய ஜீப் டிரைவருக்கு நிச்சயம் அசாத்தியமான திரில்லான அனுபவம் கிடைத்திருக்கும் என்கிறார்கள். வாழ்க்கையில எல்லாரும் ஒரு தடவை இதில் போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும். முதுகு வலி, மூட்டுவலி ஒன்றுமே வராது என்று கிண்டலாக கூறியுள்ளார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications