ஊட்டி, கொடைக்கானல் தாண்டி... செப்டம்பரில் ஹனிமூன் செல்ல அற்புதமான தேனிலவு இடங்கள்
கொடைக்கானல்: தென்மேற்கு பருவ மழை காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகிறது. பெரிதாக தற்போது மழை இல்லை. செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை , ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன்போன்ற இடங்களில் ஆஃப் சீசன் ஆகும். இந்த காலக்கட்டம் தமிழ்நாட்டில் ஆவணி மாதம் என்பதால் ஏராளமான திருமணம் நடைபெறும். எனவே புதிதாக திருமணம் ஆனவர்கள் ஹனிமூன் செல்ல அற்புதமான தேனிலவு இடங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஆவணி மாதத்தில் ஏராளமான திருமணம் நடைபெறும். வைகாசி மாதத்திற்கு பிறகு ஆவணியில் தான் பலரும் திருமணம் செய்து கொள்வார்கள். குறிப்பாக வளர்பிறை முகூர்த்தங்களில் திருமணம் செய்யவே விரும்புவார்கள். அந்த வகையில் செப்டம்பர் முதல் வாரம் முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை ஏராளமான முகூர்த்தங்கள் உள்ளன.

இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள், திருமணம் முடித்த கையோடு தேனிலவுப் பயணம் செல்வார்கள். இந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இன்பமான நிகழ்வாக இருக்கும். இதற்கு சரியான இடங்களைத் தேர்வு செய்தால் தான் அந்த தேனிலவுப் பயணம் இனிமையாக இருக்கும். எனவே செப்டம்பரில் தேனிலவு செல்ல விரும்புவோருக்கான இடங்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம்மவர்கள் தேனிலவுக்கு அதிகம் விரும்பும் இடங்கள் என்றால் அது ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஏற்காடு, தேக்கடி, வாகமன் போன்ற ஐந்து இடங்களை விரும்புவார்கள். இதற்கு காரணம், இந்த இடங்களில் கிளைமேட் மிக அருமையாக இருக்கும். பெரிய அளவில் மழையும் இருக்காது. அப்படியே மலை இருந்தாலும் கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய பகுதிகளில் கிளைமேட் சிறப்பாக இருக்கும்.

ஹனிமூன் செல்ல ஊட்டியும் கொடைக்கானலும் மிகச்சிறந்த இடங்கள் ஆகும். ஏனெனில் கடல் மட்டத்தில் 2200 அடி உயரத்திற்கு மேல் உள்ள ஊட்டியும் கொடைக்கானலும் கிளைமேட்டை பொறுத்தவரை செப்டம்பர் மாதங்களில் 17 டிகிரி முதல் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்கும். ஊட்டியை பொறுத்தவரை பசுமை மாறா தேயிலைக்காடுகளும், வெள்ளை பனிமூட்டமும் உங்களை மெய்சிலிர்க்க செய்யும். கூட்டம் என்பது பெரிய அளவில் இருக்காது. உங்கள் வாழ்க்கை துணையுடன் தனிமையில் இயற்கையை ரசித்தபடி உலா வருவதற்கு ஏற்ப இடங்கள் எல்லாமே இருக்கும்.
இதேபோல் கொடைக்கானலில் கிளைமேட் தொடங்கி பசுமை மாறாக காடுகள் வரை எல்லாமே புன்னகை பூத்தபடி வரவேற்கும். அங்குள்ள நட்சத்திர ஏரியில் மாலை மங்கும் நேரத்தில் வாழ்க்கை துணையுடன் சைக்கிள் செல்வதும், நடந்து செல்வதும் மிக அற்புதமான அனுபவம் ஆக இருக்கும். கொடைக்கானலில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கிறது என்றாலும் அங்குள்ள பூங்காக்களில் மாலை வேளையிலும் , மாலை வேளையிலும் நீர் சுமந்து கடந்து செல்லும் மேகமூட்டம் உங்கள் மீது படும் போது, அது அலாதியானதாக இருக்கும்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் கால நிலை குளுகுளுவென இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு செப்டம்பர் முதல் ஜனவரி வரை சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகும்.. மலைப்பாதையில் உள்ள 20 கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் அனுபவம் அலாதியானது. ஹனிமூன் ஜோடிகளுக்கு அறை எடுத்து தங்கி சுற்றி பார்க்கவும், கால நிலை சிறப்பானதாக இருக்கும். ஏற்காட்டில் வானிலை என்பது இரவில் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும், பகலில் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும்.
மூணாறு: மூணாறை பொறுத்தவரை கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தென்னகத்து காஷ்மீர் எனறு அழைக்கப்படும் இந்த ஊர் தேனிலவு செல்வோருக்கு சொர்க்க பூமியாக இருக்கும். ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோடைவாசல் தலமாக இருக்கிறது. எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள், மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தேக்கடி மற்றும் வாகமன்: செப்டம்பரில் தேனிலவு கொண்டாட சிறந்த இடங்களில் தேக்கடியும் ஒன்று. தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள இந்த இடத்தில் பெரியார் வனஉயிரியல் சரணாலயம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வனஉயிரியல் சரணாலயம் இந்த இடமும், இதன் அருகில் உள்ள வாகமனும் இயற்கை விரும்பிகள் மற்றும் புதுமண ஜோடிகளின் கனவுப்பிரதேசம் ஆகும். ஜீப் சவாரி மற்றும் படகு சவாரியும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழ்நாடு கேரளாவை போல் கர்நாடகா மாநிலத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்றால் அது கூர்க் ஆகும். தேனிலவு தம்பதிகள் பலர் இங்குள்ள அட்வெஞ்சரை விரும்புவார்கள். கூர்க்கில் ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு டிரக்கிங் செல்வது அலாதியான அனுபவம் ஆகும். காவிரி ஆற்றில் பரிசல் செய்யலாம். அருவியில் குளித்து மகிழலாம். தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் தங்கலாம். வீடுகளை மக்கள் வாடகைக்கு விடுகிறார்கள். எனவே இந்த இடம் பல தம்பதிகளுக்கு பிடித்த இடம் ஆகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications