சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அபாரமான 4000".. வாயார பாராட்டிய அபிஜித்.. மனைவிக்கு குழுவில் இடம்.. பலே திட்டங்கள் "ஆன் தி வே"?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நிவாரணம் ரூ 4000 வழங்கும் திமுக அரசின் திட்டத்தை பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி பாராட்டிய நிலையில் அவரது மனைவி எஸ்தர் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்கள் காத்திருப்பதாகவே தெரிகிறது.

தமிழகத்தில் ரூ 5 லட்சம் கோடி கடன் இருப்பதாக முந்தைய அதிமுக அரசு பட்ஜெட்டின் போது கூறியிருந்தது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு நல்ல பல திட்டங்களை மக்களுக்கு அளிக்க உறுதியளித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கித்தான் ஆக வேண்டும்.. திமுகவின் முரசொலி வலியுறுத்தல்ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கித்தான் ஆக வேண்டும்.. திமுகவின் முரசொலி வலியுறுத்தல்

அதற்கு பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். ஏற்கெனவே கடனில் தத்தளிக்கும் தமிழகம், இதில் கொரோனாவால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை சரி செய்ய முதல்வர் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

யார் இந்த 5 பேர்

யார் இந்த 5 பேர்

அதாவது முதல்வருக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர்களை கொண்டு ஒரு பெரிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸை சேர்ந்த ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித் துறை செயலாளர் எஸ் நாராயண் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச நிறுவனங்கள்

சர்வதேச நிறுவனங்கள்

இந்த 5 பேரும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். இதில் பெரிதும் கவனிக்கப்படும் நோபல் பரிசு பெற்றவர் எஸ்தர் டஃப்லோ. இவர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர். இவரது கணவர் அபிஜித் பானர்ஜி.

மத்திய அரசு

மத்திய அரசு

இவரும் பொருளாதார மேதை. இவரும் மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்தவர். அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக ரூ 4000 இரு தவணைகளாக வழங்கப்படுவதற்கு அபிஜித் பாராட்டியுள்ளார்.

வீடியோ

வீடியோ

இதை ஸ்டாலினே ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார். எனவே அபிஜித் மனைவியை குழுவில் இடம் பெற செய்ததன் மூலம் ரூ 4000 நிவாரணம் போன்ற மேலும் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதை திமுக மறைமுகமாக சொல்வதாகவே தெரிகிறது.

English summary
Ester's hubby Abhijit Banerjee praises Stalin's Corona relief fund Rs 4000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X