சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீசும் காற்றில் பரவிய விஷம்! அப்படியே மயங்கி சரிந்த பெண்கள்! சென்னை கொடுங்கையூரில் ஷாக்! என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை : கொடுங்கையூரில் கெமிக்கல் கம்பெனியில் ஏற்பட்ட வாயு தாக்குதலில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் லட்சுமி அம்மன் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கொடுங்கையூர் சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் பாலாஜி எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் சொலுயூஷன் தயார் செய்யும் கம்பெனியை நடத்தி வருகிறார்.

இந்த கம்பெனியில் கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த தேன்மொழி, கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமுதவல்லி ஆகிய இரண்டு பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

'சைக்கோ' நர்ஸ்.. பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற கொடூரம்.. சினிமா பாணியில் கொலை! 'சைக்கோ' நர்ஸ்.. பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற கொடூரம்.. சினிமா பாணியில் கொலை!

 விஷ வாயு

விஷ வாயு

நேற்று இரவு 11 மணி அளவில் வேலை செய்து கொண்டிருந்தபோது சொலுயூஷன் நிரப்பப்பட்ட டரம்மின் மூடியில் உடைப்பு ஏற்பட்டு திரவம் மொத்தமாக வெளியேறியது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் அமுதவல்லி தேன்மொழி ஆகியோர் வாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வெளியே நின்று இருந்த தேன்மொழியின் மகன் சுரேஷ் 38 என்பவர் அவர்களை காப்பாற்ற சென்றபோது அவரும் மயங்கி விழுந்தார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கும் முல்லை நகர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தேன்மொழி மற்றும் அமுதவல்லி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணை

விசாரணை

சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கெமிக்கல் அடைக்கப்பட்டிருந்த டிரம்மை திறக்கும் போது அது உடைந்து கெமிக்கல் முழுவதும் பரவியதில் மூச்சுத் திணறலால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

English summary
Four people have been hospitalized in the gas attack at a chemical company in Kodunkaiyur, and a detailed investigation has been ordered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X