உலகிலேயே மிக உயரமான பாலம்.. 2 மணி நேர பயணம் இனி 2 நிமிடம்.. சீனா நிகழ்த்திய பொறியியல் அதிசயம்
பெய்ஜிங்: சீனாவின் குய்ஷோ மாகாணத்தை பொறுத்தவரை மிகவும் மலைப்பகுதிகளை கொண்ட மாகாணம் ஆகும். இங்கு பாதைகள் எல்லாம் செங்குத்தான மற்றும் கரடு முரடான மலைப்பகுதிகளை கொண்டது. இங்கு ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் தான் உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 2051 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இப்பாலம் காரணமாக, இரண்டு மணி நேர பயணம், வெறும் 2 நிமிடமாக குறைந்துள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் பல்வேறு மாகாணங்கள் மலைகளை கொண்டவையாக உள்ளன.குறிப்பாக சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோ மாகாணத்தை பொறுத்தவரை கரடு முரடனான மலைப்பாதையை கொண்டது, அங்கு உள்ள ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கின் மீது புதிய பாலம் ஒன்றை கட்டியிருக்கிறது சீன அரசு. இந்தப் பாலம் தற்போது உலகின் மிக உயரமான பாலம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது ஆற்றின் மேற்பரப்பில் இருந்து சுமார் 625 மீட்டர் (2,051 அடி) உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பாலம் முந்தைய சாதனையைச் சீனாவுக்குள்ளேயே இருந்த பெய்பன்ஜியாங் பாலத்தின் அளவையே (565 மீட்டர் உயரம்) முறியடித்தள்ளது. சீனா கட்டியுள்ள இந்த பாலத்தின் மொத்த நீளம் சுமார் 2,890 மீட்டர் (4,658 அடி) ஆகும். இந்த பாலத்தை வெறும்3 ஆண்டுகளில் கட்டி முடித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் மலைப்பாங்கான பகுதியில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட தாங்குதளம் கொண்ட எஃகு டிரெஸ் கிரிடர் சஸ்பென்ஷன் பாலம் (longest-span steel truss girder suspension bridge) என்ற பெருமையை பெற்றுள்ளது. ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலத்தை கட்ட பயன்படுத்தப்பட்ட எஃகு, கட்டுமானத்தின் எடை, கிட்டத்தட்ட மூன்று ஈபிள் கோபுரங்களின் எடைக்குச் சமம் என்று சீன ஊடகங்கள் சொல்கின்றன. இந்தப் பாலம் வெறும் போக்குவரத்து இணைப்பாக மட்டும் உருவாக்கப்படவில்லை.. பலரும் வந்து உலகின் மிகப்பெரிய மேம்பாலத்தை பார்க்க விரும்புவார்கள் என்பதால், சுற்றுலாத் தலமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 207 மீட்டர் உயரமுள்ள பார்வை லிஃப்ட் மற்றும் ஸ்கை கஃபேக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறி மக்கள் பாலத்தின் அழகை ரசித்து மகிழ முடியும்.
ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறப்பின் காரணமாக முன்னர் இரண்டு மலையின் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணிநேரத்தில் இருந்து வெறும் இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்த மேம்பாலம் காரணமாக குய்ஷோ மாகாண மக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள். அங்கு போக்குவரத்திற்காக மக்கள் அதிக நேரத்தை இனி செலவிட தேவையிருக்காது. விரைவாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும் வகையில் கட்டுமானங்களை சீனா உருவாக்கி வருகிறது. இப்படி சீனா பல்வேறு பாலங்கள் கட்டுவது முதல் முறையல்ல. பல மேம்பாலங்களை கட்டியிருக்கிறது.
குறிப்பாக சொல்வது என்றால், உலகிலேயே மிக உயரமான 100 பாலங்களில் கிட்டத்தட்ட பாதி பாலங்கள் குய்ஷோ மாகாணத்தில் இருக்கிறது. இங்கு ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலத்திற்கு முன்பு உலகின் பெரிய பாலமாக டுகே பாலம் இருந்து. பெய்பன் ஆற்றுக்கு மேல் கட்டப்பட்டிந்தது. அதே பெய்பன் ஆற்றில் தான், இந்த புதிய ஹுவாஜியாங் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் டுகே பாலத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டுள்ளது. குய்ஷோ மாகாணத்தையும், யுன்னான் மாகாணத்தையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டிருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications