காலாண்டு விடுமுறை.. வால்பாறை போறீங்களா.. அங்குள்ள ஆச்சர்யமான அதிசயத்தை மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

வால்பாறை: காலாண்டு விடுமுறை மற்றும் தொடர்விடுமுறை காரணமாக பலரும் வால்பாறைக்கு குவிந்து வருகிறார்கள். குறிப்பாக வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிகிறாரக்ள். அங்கு மழையையும் பொருட்படுத்தாமல் குளித்துவிட்டு செல்பி எடுக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

காலாண்டு தேர்வு விடுமுறை சமயமான இப்போது எங்காவது சுற்றுலா போக வேண்டும் பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். வார இறுதி நாட்களான இப்போது பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது.குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, மேகமலை, வால்பாறை, மூணாறு, வாகமன், தேக்கடி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு அதிக அளவில் மக்கள் சுற்றுலா செல்கிறார்கள்.

Quarterly Holiday: Are you going to Valparai? Dont miss the amazing wonder there

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை வால்பாறைக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவு மக்கள் சுற்றுலா செல்கிறார்கள். கோவை மாவட்டம் வால்பாறையில் கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. இதமான கால நிலை காரணமாக பலரும் வால்பாறைக்கு வந்த வண்ணம் உள்ளார்கள்.

இங்கு கோவை மாவட்டமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்படி வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகுகளை ரசிக்கிறார்கள். தொடர் விடுமுறை காரணமாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன,

காலாண்டு பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் அதிகளவில் வருகிறார்கள். வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதியில் நேற்று ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் குவிந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்பி எடுத்தார்கள்.

Quarterly Holiday: Are you going to Valparai? Dont miss the amazing wonder there

வால்பாறையை பொறுத்தவரை நேற்று மதியம் 2 மணி முதல் வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. சுற்றுலா பயணிகள் மழை மற்றும் இதமான காலநிலையை பார்த்து மகிழ்ந்து போனார்கள். வரும் நாட்களில் அதாவது நாளை முதல் கூடுதல் சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கூழாங்கல் ஆற்று பகுதிக்கு அதிக அளவில் வருவார்கள் என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதேபோல் இருசக்கர வாகனத்தில்வரும் பயணிகள் அதிவேகத்தில் ஒட்டி சாகசங்களில் ஈடுபடாமல் வர வேண்டும்.வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்காத வண்ணம் இவர்கள் செயல்கள் இருக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிவரக்கூடாது. இதனை கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+