பூமியின் சொர்க்கமே இதுதான்.. தேனி அருகே டைட்டானிக் ஹீரோ வியந்த இடம்.. சுற்றுலா பயணிகளுக்கு சர்ப்ரைஸ்
தேனி: தமிழக-கேரள எல்லையில் நெடுங்கண்டம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் ராமக்கல் மெட்டு பகுதியை தமிழக எல்லையில் இருந்து ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக வனத்துறை அங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதித்து இருந்தது. இதனால் ராமக்கல்மெட்டுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்தது. தற்போது மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கிறார்கள்.
மலையும் மலைச்சார்ந்த இடங்களுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் எல்லையில் உள்ள ராமக்கல் மேடு. இந்த இடம் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ளது என்றாலும் இதற்கான வழி என்பது கேரளாவில் தான் உள்ளது.. டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ இந்த பூமியில் சொர்க்கம் ஒன்று உள்ளது என்றால் அது ராமக்கல் மேடு தான் என புகழ்ந்துள்ளார்.

தமிழக-கேரள எல்லையில் நெடுங்கண்டம் அருகேதான் இந்த ராமக்கல்மெட்டு உள்ளது. முழுவதும் மலையுடன் பசுமை போர்த்திய அழகான இயற்கை எழில் கொஞ்சும் ராமக்கல் மேடானது கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி (1,100 மீ) உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது. நெடும் கண்டத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மூணாறு - தேக்கடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களே தேனி, கம்பம், குமுளி வழியாகவும் செல்லலாம். கம்பம் பகுதியில் இருந்து சுமார் 22கி.மீட்டர் தொலைவில் ராமக்கல் மேடு அமைந்திருக்கிறது.
ராமர் வனவாசம் சென்ற காலங்களில், சீதை ராவணனால் கடத்தப்பட்ட பிறகு இந்த மலைப் பகுதியில் ராமர், லட்சுமணன் இருவரும் சீதையைத் தேடி அலைந்ததாக புராண கதைகளில் சொல்லப்படுகிறது. இதனால் தான் ராமரின் பாதம் பட்டதால் இந்த பகுதிக்கு 'ராமக்கல்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். அதாவது 'ராமரின் கல்' என்ற பெயரே காலப்போக்கில் ராமக்கல் என்று மாறியது என்கிறார்கள் தேனி மக்கள்.
ராமக்கல் பகுதி மலை மீது இருக்கும் சிறிய குன்று போல் இருக்கும். இதன் காரணமாக ராமக்கல் மேடு என்று பெயர் மறுவியது. அதுவே இப்போது பெயராக மாறிவிட்டது. ராமக்கல் மேட்டில் ஆண்டு முழுவதும் குளிர்ந்த சீதோஷண நிலையும், ஆண்டு முழுவதும் அதிகளவில் காற்றும் வீசும். இதனால் இங்கு காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ளன. இதில் கேரளாவிற்கான மின் தேவைகளை கணிசமாக பூர்த்தி செய்து வருகிறது. அதிகம் பெயர் போன இடமாக இந்த ராமக்கல் மேடு உள்ளது. கேரளாவின் பெரும் பங்கு மின்சார தேவையை இந்த காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.
பச்சை பசையெல புல்வெளிகளுடன் காட்சியளிக்கும் இந்த பகுதியில் மலையின் மேல் இருந்து ரசிப்பது, மூணாறு , தேக்கடி, இடுக்கி அணை வரும் சுற்றுலா பயணிகள் ரசிப்பது வழக்கம்.அந்த வகையில் தமிழக எல்லைப்பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் ராமக்கல்மெட்டு பகுதியை கண்டுகளித்து வந்தனர். அங்கிருந்து பார்க்கும்போது தேனி மாவட்டம் தேவாரம், கோம்பை பகுதிகள் பார்போரின் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
இந்தநிலையில் தமிழக எல்லைக்குள் வருகிற சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை ஆங்காங்கே வீசி சென்றார்கள். இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி முதல் தமிழக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைய வனத்துறையினர் தடை விதித்தனர். இதுதொடர்பாக தமிழக வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் அதிரடியாக வைக்கப்பட்டது.
இதன் காரணமாக ராமக்கல்மெட்டுக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் ராமக்கல் மேடு பகுதி மக்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு ராமக்கல்மெட்டு பகுதியில், தமிழக எல்லைக்குள் சுற்றுலா பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று முதல் தற்காலிகமாக வனத்துறையினர் நீக்கி உள்ளார். இதனால் தமிழக பகுதியில் இருந்து ராமக்கல்மெட்டில் உள்ள எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து, ரசித்து செல்கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications