சென்னை ஈசிஆரில் இப்படி ஒரு தனி தீவா? 1.30 மணி நேரம் பயணத்தில் மறைந்து கிடக்கும் அற்புதம்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரரம் பயணம் செல்ல பலருக்கும் பிடிக்கும், அப்படி பயணிப்போர் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான தீவினை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம் இருக்கிறது. இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது. படகுகள் மூலம் இந்த கடற்கரை தீவுக்கு சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வமுடன் சுற்றுலா சென்று வருகிறார்கள்.. இது சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப்பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வார இறுதியில் ஒரு நாள் வந்து அற்புதமாக கழிக்கலாம். இங்கு 8 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, 6 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, நீர் விளையாட்டான இரண்டு இருக்கைகள் கொண்ட வாட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கும் உள்ளது.
அதேபோல் மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகுகள், இரண்டு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகுகள், இரண்டு இருக்கைகள் கொண்ட மிதிப்படகு உள்பட பல வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் மூலம் அங்குள்ள ஒரு தீவிற்கு போய் 20 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கழிக்க முடியும். தனிமையில் அற்புதமான தீவில் மனத்திற்கு பிடித்தவர்களுடன் தீவினை ரசிக்கலாம்.
இந்த தீவிற்கு சென்று திரும்ப ஒரு மணி நேரத்திற்கு எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு 3,000 ரூபாய்க்கும், ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகு 2,300 ரூபாய்க்கும், 20 நிமிடத்திற்கு எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு 1,000 ரூபாய்.ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகு 750 ரூபாய்க்கும் இயக்கப்படுகிறது.
நீர் விளையாட்டான இரண்டு இருக்கைகள் கொண்ட வாட்டர் ஸ்போர்ட்ஸ் பைக், 5 நிமிடத்திற்கு 900 ரூபாய்க்கும், மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு 10 நிமிடத்திற்கு 1,150 ரூபாய்.மேலும், 1 மணி நேரத்திற்கு இரண்டு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகு 750 ரூபாய்க்கும், இரண்டு இருக்கைகள் கொண்ட மிதிப்படகு 20 நிமிடத்திற்கு 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிது. இதில் உங்களுக்கு பிடித்தபடி படகில் பயணம் செய்து பொழுதை கழிக்கலாம்.

முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கிறது. பறவைகளைப் பார்வையிடுவோருக்கு சொர்க்கமாகவும், சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் இருக்கிறது. பாண்டிச்சேரிக்கு லாங் டிரைவ் போகிறவர்கள் அப்படியே இங்கு போய்விட்டு வரலாம். அதேபோல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீண்ட தூரம் பயணித்து இயற்கையை ரசிக்க விரும்புவோர் முதலியார்குப்பம் போகலாம்.
புதுச்சேரிக்கு மிக அருகில் உள்ள பகுதி என்பதால், புதுச்சேரியில் உள்ள பலருக்கும் விருப்பமான இடமாக உள்ளது. சென்னையில் 93 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னை திருவான்மியூரில் இருந்து வெறும் 79 கிலோ மீட்டர் தான். ஒன்றரை மணிநேரத்தில் போய்விடலாம்.. இந்த வார இறுதியில் போய் பாருங்கள்..
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ்












Click it and Unblock the Notifications