தேனியில் இந்தியாவின் 'சுவிட்சர்லாந்து'.. தமிழகத்தின் நிலம்.. கேரளாவிற்கு கோடிகளை கொட்டும் 'தங்கம்'
தேனி: "இயற்கை கொடுத்தது தமிழ்நாட்டிற்கு, ஆனால் அதை வைத்து லாபம் ஈட்டுவது கேரளா" - இதுதான் தேனி மாவட்டத்தின் இன்றைய சுற்றுலா எதார்த்தம். தேனி மாவட்டத்தின் மலை முகடுகளைக் காட்டியே கேரளா ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு வனத்துறை நிலங்களை பாதுகாப்பு காரணங்களை காட்டியே இன்னும் உறக்கத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்று தமிழ்நாட்டில் சுற்றுலா மாநாடு நடந்தது. இந்த சுற்றுலா மாநாடு பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை.. அரசு ஏற்கனவே சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை இன்னும் பிரம்மாண்டமான வசதிகளுடன் மாற்ற தயாராகி வருகிறது. அதேநேரம் ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ள சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதுபற்றியோ, அதனை கேரளா மாடலில் டெவலப் செய்து விளம்பரம் செய்வது குறித்தோ அரசு திட்டமில்லை.. அதுபற்றி பார்ப்போம்.

மூணாறு ஒரு மாயை- கொழுக்குமலையே நிஜம்
கேரளாவின் 'மூணாறு' இன்று சர்வதேச அளவில் புகழ்பெறக் காரணம், அங்குள்ள தேயிலைத் தோட்டங்களும், மேகங்கள் முத்தமிடும் மலை முகடுகளும்தான். ஆனால், உண்மையில் கேரளா காட்டிச் சம்பாதிக்கும் அந்த "அதிசய இடங்கள்" பலவும் தமிழகத்தின் தேனி மாவட்டத்திற்குச் சொந்தமானவை என்பதுதான் அப்பட்டமான உண்மை
டாப் ஸ்டேஷன்
உலகின் மிக உயரமான தேயிலைத் தோட்டம் எனப் புகழப்படும் கொழுக்குமலை, புவியியல் ரீதியாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ளது. அதேபோல், சுற்றுலாப் பயணிகள் வியந்து பார்க்கும் டாப் ஸ்டேஷன் பகுதியும் தமிழக எல்லைக்குள் தான் வருகிறது. ஆனால், இந்த இடங்களுக்குச் செல்லத் தமிழகப் பகுதியில் முறையான சாலைகளோ, போக்குவரத்து வசதிகளோ தமிழ்நாட்டில் இருந்து கிடையாது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட கேரளா, தனது மாநிலத்திலிருந்து சாலைகளை முறையாக அமைத்து, "மூணாறு" என்ற பெயரில் நம் ஊர் சொத்துக்களைக் காட்டி உலக சுற்றுலா பயணிகளிடம் காசு பார்த்து வருகிறது. இது தவறு கிடையாது. அதேபோல் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு இருந்தாலும் அரசு இதுவரை அதனை செயல்படுத்தாதது ஆச்சரியமானது.
வனத்துறையின் பிடியும்... நழுவும் வாய்ப்புகளும்
கேரள அரசு தனது வனப்பகுதிகளைச் சுற்றுலாவுக்காகத் திறந்துவிட்டு, 'ஈக்கோ-டூரிசம்' மூலம் கோடிகளை அள்ளி குவிக்கிறது. ஆனால், தமிழக வனத்துறையோ மேகமலை மற்றும் குரங்கணி போன்ற இடங்களைப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி முடக்கி வைத்திருக்கிறது.
என்ன செய்யலாம்
குரங்கணி - கொழுக்குமலை - டாப் ஸ்டேஷன் இணைப்பு: இந்தப் பாதையைச் சர்வதேசத் தரத்திலான டிரெக்கிங் மற்றும் சாகசப் பயண மண்டலமாக மாற்ற வேண்டும். போடியிலிருந்து டாப் ஸ்டேஷனுக்கு ஒரு பிரம்மாண்ட ரோப்வே அமைப்பதன் மூலம், பயணிகள் கேரளா செல்லாமலேயே தமிழகம் வழியாக இந்த மலைகளை எளிதாக அடைய முடியும். காடுகளை அழிக்காமல் மர வீடுகள் மற்றும் நவீனக் குடில்களை அமைப்பதன் மூலம் 'பிரீமியம்' சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கலாம்.
ஆயிரம் கோடி வருமானம்
மூணாறைச் சுற்றியுள்ள பகுதிகள் மூலம் கேரளா ஆண்டுக்குச் சுமார் ரூ. 4,000 முதல் 6,000 கோடி வரை வருமானம் ஈட்டுகிறது. தமிழக அரசு மேகமலையையும், கொழுக்குமலையையும் முறையாக 'பிராண்டிங்' செய்து, தங்கும் வசதிகளை ஏற்படுத்தினால், அந்த வருமானத்தில் பாதியை நாம் மிக எளிதாகத் தேனி மாவட்டத்திற்குக் கொண்டு வர இயலும். இதன் மூலம் கேரளா கடவுளின் தேசம் என்று சொல்லும் கனவுப்பாதையை தமிழ்நாடு வழியாக பார்ப்பவர்களும் அதிகரிப்பார்கள்.
தேனியில் தான் குளிரான இடம் உள்ளது
இன்று வரை நிறையபேருக்கு தெரியாத உண்மை ஒன்று உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிக குளிரான சுற்றுலா தலம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஊட்டி, கொடைக்கானலைவிடவும் குளிரான இடம் என்றால், அது தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை தான்.. அதேபோல் மேகமலையும் மூணாறு போன்ற கிளைமேட் உள்ள பகுதியாகும். அங்கு சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தினால் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சுற்றுலா பேருந்து
தேனி மாவட்டத்தில் சுருளி அருவி, சின்ன சுருளி, குரங்கணி அருவி, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, வைகை அணை , மஞ்சளாறு அணை, திரும்பிய பக்கம் எல்லாம் ஆறுகளை மற்றும் அருவியை கொண்டது. இவை இல்லாமல் ஏராளமான சிறிய அருவிகள் மற்றும் அணைகள் மற்றும் அற்புதமான வனப்பகுதி சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை ஒரே நாளில் பார்க்கும் வகையில் சுற்றுலா பேருந்துகளை அரசு இயக்கி வருமானம் பார்க்கவும் முடியும். அரசு நினைத்தால் மட்டும் போதும்.. ஏனெனில் தேனி மாவட்டத்தை இந்தியாவின் 'சுவிட்சர்லாந்து' ஆக மாற்றுவதற்கான அனைத்துத் தகுதிகளும் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. தேவையெல்லாம் ஒன்றே ஒன்றுதான் - தமிழக அரசின் முன்னெடுப்பும், வனத்துறையின் ஒத்துழைப்பும் மட்டுமே!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications