சிபிஐ-ஐ வைத்து பயமுறுத்தும் பாஜக.. ரூ.20 லட்சம் கொடுத்தது லஞ்சம்! விஜயை விடாமல் தாக்கிய சீமான்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை தீவிரமடையும் எனவும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் ரூ.20 லட்சம் வழங்கியதற்குக் காரணம், சி.பி.ஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பா.ஜ.க கூட்டணிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரவில்லை என்றால் சி.பி.ஐ விசாரணை தீவிரமாகும். கரூர் எஃப்.ஐ.ஆரில் விஜய் பெயர் சேர்க்கப்படாதது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் வழங்கியதற்குக் காரணம், சி.பி.ஐ விசாரணையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் எதிராகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான். 20 லட்ச ரூபாயை வாங்கிய குடும்பங்கள் சிபிஐ விசாரணையில் எதிராகப் பேசுமா?

Seeman Vijay TVK

சீமான்

சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் நடிகர் விஜய் பெயர்கள் ஏன் இடம்பெறவில்லை. 41 பேர் இறப்புக்குக் காரணமான விஜயையே முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை என்றால் சி.பி.ஐ வழக்கு விசாரணை எப்படி இருக்கும் . மாநில அரசு காவல்துறை விசாரிக்கும் போது முன்ஜாமீன் கேட்ட புஸ்ஸி ஆனந்த், சி.பி.ஐ விசாரணை வந்த பிறகு முன் ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற்றது ஏன்?

விஜய் மீது குற்றச்சாட்டு

சி.பி.ஐ விசாரணை இந்த வழக்கில் விஜய்யை விசாரிக்கப் போகிறதா? அல்லது பாதுகாக்கப் போகிறதா?
நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்கள் என் பின்னால் வரட்டும். நடிகர்கள் பின்னால் செல்பவர்கள் என் பின்னால் வர வேண்டாம். ஆளுங்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது டாஸ்மாக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதும்தான் தி.மு.க.வின் பாலிசி.

நாம் தமிழர் கட்சி

பிப்ரவரி 7-ஆம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு நடைபெறும். அதில் அனைத்து சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள் . திருச்சியில் மாநாடு நடைபெறுவதால் திருப்புமுனை என்று நினைக்க வேண்டாம், எங்கள் திருப்பம் எங்களது சிந்தனையில் இருக்கிறது. 200 இடங்களில் தி.மு.க. வெற்றி பெறும் என்பார்கள். பின்னர் தோல்வி அடைவோம் என்று கூறுவார்கள்.

2026 தேர்தல்

2026 தேர்தலில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் எந்தக் கொம்பாதி கொம்பனையும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள். இலங்கையில் ஜனதா அபி முக்தி பெரமுனாம் (JVP) 3% வாக்குகளை மட்டுமே வைத்திருந்த நிலையில், பொதுமக்கள் மனதில் மாற்றம் வந்ததால் இன்று 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+