விடிய விடிய கனமழை.. சுருளி அருவியில் கடும் வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், இரவு முழுவதும் விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கின் அருகே அமைந்திருக்கும் சுருளி அருவி, இயற்கை அழகுடன் ஆன்மீகப் பெருமைகளும் ஒருங்கே அமையப் பெற்ற புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள பூதநாராயண சுவாமி திருக்கோயில், சுருளி வேலப்பர் கோயில், மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான தர்கா ஆகியவை இருப்பதால், இது ஒரு மத நல்லிணக்க மையமாகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் விளங்குகிறது.

குறிப்பாக சுருளி அருவிக்கு அருகில் உள்ள சுருளி வேலப்பர் கோயில் மிகப்புகழ் பெற்றது. இக்கோயிலின் அருகே உள்ள கைலாய குகையில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்தர்களும் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தக் குகைக்குள் நுழைந்து தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள விபூதி குகையில், ஈர மண் காய்ந்ததும் இயற்கையாகவே விபூதியாக மாறுவது வியப்புக்குரிய ஒரு அதிசயமாக மக்களால் பார்க்கப்படுகிறது .
சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இரண்டு கட்டங்களாக விழும் இந்த சுருளி அருவியின் காட்சியும், அடர்ந்த வனப்பகுதியும் மனதுக்கு இதமளிக்கும் இயற்கைச் சொர்க்கமாகும். இங்கு வந்து குளித்து, புத்துணர்ச்சி பெறுவதும், சுற்றியுள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதும் பக்தர்களின் வாடிக்கையாகும் .
மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சுருளிமலையில், சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீரோடைகள் சங்கமிக்கின்றன. இந்த அருவி நீரில் குளிப்பது உடல் பிணிகளை நீக்கி, புத்துணர்ச்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த இயற்கை மூலிகை நீரின் மகத்துவம்தான் பலரையும் ஈர்க்கும் முக்கியக் காரணமாகும்.
சுருளி அருவியில் வெள்ளம்
நேற்று இரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததன் விளைவாக, வனப்பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேகமலை, இரவங்கலார், மகாராஜா மெட்டு, வெண்ணியாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, காட்டாறுகள் மற்றும் நீரோடைகள் அனைத்தும் சுருளி அருவியுடன் சங்கமித்து, அருவியில் வெள்ளம் சீறிப் பாய்ந்து கொட்டுகிறது. நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் குளிப்பதற்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
வனத்துறையினரின் எச்சரிக்கை:
வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் முற்றிலுமாகத் தடை விதித்துள்ளனர். கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள், "கனமழை பெய்து வருவதால் அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வர வேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சபரிமலை யாத்திரைக்காக கம்பம் வழியாகச் செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தத் தடை, அருவியின் நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications