கேப் விட்டது மழை.. ஆனா நாளை காலை வரை ஓயாது.. சென்னையில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ மழை பதிவு!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும், இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கிண்டி, தி.நகர், மீனம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகமான நீர்தேங்கிய காரணத்தால், பெரம்பூர் ஹைவே சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன. தற்போது மழைநீர் வடிந்து வருவதால் போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் கடந்த 3 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழையால், சுமார் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையின் 5 இடங்களில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சென்னையில் மழை ஓய்ந்துள்ள நிலையில், இன்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications