அடுத்த 3 மணி நேரத்தில் மழை.. சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொட்ட போகுது.. வானிலை மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்த முன்னெச்சரிக்கைகளை ஒரு நாள் முன்பாகவும், சில நாட்கள் முன்பாகவும் வெளியிடும். அதேநேரம் வெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு மேகங்கள் கூடியதை வைத்து சரியாக கணித்து மழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பெரிதாக மழை இல்லை.. சிறிய அளவிலேயே சாரல் மழை பெய்தது. அதேநேரம் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய மழைக்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி, "மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும்.
இதனால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் 'ஆரஞ்சு' எச்சரிக்கை நிர்வாக ரீதியாக விடுக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை (சனிக் கிழமை) முதல் 24-ந்தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications