6 மாசமாக நடக்காத ஒரு விஷயம்.. 4 மணி நேரத்தில் நடந்துவிட்டது.. கனமழைக்கு இடையே சென்னைக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.

கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரவாயில், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

weather tamilnadu weatherman summer weather news

கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயில் இடையே முக்கிய சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.

பெஞ்சல் புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவு. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலையில் போடப்பட்டிருக்கும் இரும்பு தடுப்புகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சென்னை மழைக்கு இடையே 4 மணி நேரத்தில் 8 மடங்காக நீர் வரத்து கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,200 கன அடி அதிகரித்துள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.

அதன்படி சென்னை மாநகருக்கு தேவையான மழை நீர் கிடைத்துள்ளது. நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 4 மணி நேரத்தில் நீர்வரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 3,645 mcft இல் தற்போதைய அளவு 2,313 mcft ஆக உள்ளது. இதனால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் அடுத்த வருடம் இருக்காது. நேற்று வரை இருந்த தண்ணீர் பஞ்சம் அபாயம் இனி இருக்காது.

சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது

தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+