6 அடி தூரம் மட்டுமே பெய்த மழை.. இரவில் நடந்த அதிசயம்.. ஆச்சரியமாக ரசித்த மக்கள்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் வெறும் 6 அடி தூரத்துக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் அதிசயித்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று இங்கு பார்க்கலாம்.
மழை.. அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பொழிவது இல்லை. ஒவ்வொரு மாநிலங்களிலும் காலநிலையை பொறுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மழை பெய்து வரும். அதேபோல் தமிழகத்தை எடுத்து கொண்டாலும் கூட சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே நேரத்தில், ஒரே அளவில் மழை என்பது பெய்வது இல்லை.

இது நமது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரே இடத்தில் வெறும் 6 அடி தூரத்துக்கு மட்டும் மழை பெய்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முராத் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள தபால் நிலையத்தின் முன்பு ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் மாவட்டத்தில் உள்ள முராத் நகர் தபால் நிலையத்தின் முன்பு ரோடு செல்கிறது. இந்நிலையில் தான் கடந்த 22ம் தேதி இரவில் ரோட்டில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 6 அடி தூரத்துக்கு மட்டும் வானில் இருந்து மழை கொட்டியது. 6 தூரத்துக்கு அப்பால் மழை எதுவும் பெய்யவில்லை. இதனால் அந்த மழையை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர். வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் நின்று பார்த்து சென்றனர். இந்த மழை சில நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறப்படும் நிலையில் அதுதொடர்பான வீடியோ என்பது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛அதேபோல் Microburst என்பார்கள். அதாவது ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டும் மழை பெய்யும். இந்த மழை என்பது 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் இருக்காது. இந்த மழை என்பது 2 அல்லது 3 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே பெய்யும். இதனை MicroBurst என சொல்வார்கள்.
அதேபோல் Localised Precipitation என்று சில நேரங்களில் நாம் கூறுவோம். நீங்கள் சொல்வதுபோல் சில அடி தூரம் மட்டுமே மழை பெய்துள்ளதாக கூறுகிறீர்கள். இப்படி சில இடங்களில் நடந்துள்ளது. ஆனால் அதற்கான காரணங்களை பார்க்க வேண்டும். அந்த இடத்தில் மட்டும் Updraft இருந்து இருக்கும். மழை தண்ணீர் மேகத்துக்கு போய் அங்கிருந்து கீழே விழுந்து இருக்கலாம். இதனால் குறுகிய தூரம் மட்டும் மழை பெய்து இருக்கலாம்.












Click it and Unblock the Notifications