சென்னை சாலைகளில் களமிறங்கிய மாநகராட்சி டீம்! அந்த இடத்தில் எப்படி வெள்ளம் தேங்கியது? பரபர விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புயல் நீர் வடிகால் இருந்தும் வெள்ள நீர் வடிய 2 முதல் 3 நாட்களுக்கு மேல் ஆன 363 இடங்களில் சென்னை மாநகராட்சி விரிவான ஆய்வு மேற்கொள்ளும் முடிவை எடுத்துள்ளது

சென்னையில் 4000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகளில் தேங்கும் தண்ணீர்.. அப்படியே வடிகால் வழியாக கால்வாய்களில் கலந்து.. கடலுக்கு செல்லும். இதுவே வடிகால் அமைப்பு.

Chennai Corporation will do an extensive study about 363 localities where flood water took more than 2 to 3 days

இதற்காக சென்னையையே கூறு போட்டு மாபெரும் வடிகால்களை அமைத்தனர். பொதுவாக சென்னையில் நேற்று முதல்நாள் பெய்தது போல எல்லாம் மழை பெய்து இருந்தால் சென்னை 4-5 நாட்களுக்கு மிதந்து இருக்கும். சென்னையே மொத்தமாக முடங்கி இருக்கும்.

சென்னை வெள்ளம்: ஏனென்றால் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.

இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.

என்ன நடந்தது?: இப்போதும் கூட சென்னையில் வெள்ளம் ஏற்பட முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

1. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று முதல்நாள் சென்னையில் தாக்கியது. சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் புயல் நிலை கொண்டு இருந்தது. அங்கே இருந்தே புயல் மிக மிக மெதுவாக நகர்ந்தது.

2. இதன் காரணமாக சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கனமழை பெய்தது. 2015 ஐ விட மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

3. சென்னையில் பல பகுதிகளில் 47 செமீ மழை பெய்தது. சில இடங்களில் 60 செமீ மழை கூட பெய்தது. சென்னையின் பல பகுதிகள் இதனால் நீரில் மூழ்கின. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன

4. கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

சென்னையில் புயல் நீர் வடிகால் இருந்தும் வெள்ள நீர் வடிய 2 முதல் 3 நாட்களுக்கு மேல் ஆன 363 இடங்களில் சென்னை மாநகராட்சி விரிவான ஆய்வு மேற்கொள்ளும் முடிவை எடுத்துள்ளது. வெள்ள வடிகால் அமைத்தும் கூட இந்த இடங்களில் நீர் தேங்கியது ஏன் என்று விசாரணை செய்ய உள்ளனர்.

இதற்காக களத்தில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மணலி, கோடம்பாக்கம், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாய்வு, வடிகால், வாய்க்கால், ஆறுகளில் அடைப்பு, கால்வாய்களின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, திருத்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+