Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரெட் தக்காளி.." சென்னையை திணறடித்த திடீர் மழை.. எங்கெல்லாம் கொட்ட போகுது? வெதர்மேன் ஜில் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் படுத்தி எடுத்து வந்தது. இதற்கிடையே சட்டென யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் பருவமழை முடிந்தது முதலே மாநிலம் முழுக்க வெப்பம் அதிகரித்துவிட்டது. பல்வேறு இடங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்களால் மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது. இடையில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.

Chennai Hit by Rare April Thunderstorm Red Thakkalis See Century of Rain says Tamil nadu weatherman

சென்னை மழை

சென்னையிலும் கூட இதுபோலத் தான் வெப்பம் அதிகமாக இருந்தது. சென்னையில் வெப்பத்துடன் ஈரப்பதமும் சேர்ந்துகொள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். வீட்டில் இருந்தாலும் கூட அசவுகரியத்தை உணர்ந்தனர். ஆனால், இப்போது சென்னை கிளைமேட் சட்டென மாறியிருக்கிறது. இன்று காலை முதலே சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. சென்னை மட்டுமின்றிப் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்த திடீர் மழை சென்னைவாசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே திடீர் மழை குறித்தும்.. சென்னையில் எந்தப் பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீன் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன்

இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நடந்த ரெட் தக்காளி.. மீண்டும் அதே ஏப்ரல் மாதத்தில் சென்னையில் அரிய இடியுடன் கூடிய மழையால் 100 மிமீ மழை கிடைக்க வேண்டும். ரெட் தக்காளிகள் சென்னையைத் தாக்குகின்றன. இப்போது தென் சென்னை மழை மேகங்களின் தாக்குதலைத் தாங்கி வருகிறது.

விசித்திரமான தற்செயல் நிகழ்வு என்னவென்றால்.. (10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மழை பெய்திருந்தது) இயற்கை அந்தத் தேதியை நினைவில் கொள்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் சென்னையில் அடிக்கடி மழை பெய்யாது. ஏப்ரல் 15, 2015 அன்று சென்னையில் 100 மிமீ மழை பெய்திருந்தது" என பதிவிட்டு 2015ல் பதிவிட்ட பழைய போஸ்டை பகிர்ந்திருந்தார்.

எங்கெல்லாம் மழை

அதேபோல மற்றொரு ட்வீட்டில், "10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் அரிதாக மழை பெய்துள்ளது. சென்னையில் சில இடங்களில் 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. இப்போது ஈசிஆர் பெல்ட்டிற்கு மழை மேகங்கள் நகர்கிறது. சிறுசேரி, கேளம்பாக்கம், மகாபலிபுரம், பொன்மார், திருப்போரூர், திருக்கலகுண்டம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும்" என பதிவிட்டுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு

2015 ஏப்ரல் மழை குறித்து அவர் பதிவிட்டிருந்த அந்தப் பழைய போஸ்டில், "வடகிழக்கு மழையைக் காட்டிலும் இது சிறப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத மழை வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் சராசரி கடல் மட்டத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இப்போது தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உள்ளது. சென்னையில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீ மழை பெய்தது. தேனி மற்றும் மதுரை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. திருப்பூரில் இரண்டாவது நாளாக 100 மிமீ மழை பெய்தது" என்று பதிவிட்டிருந்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் மாதம் இதே தேதியில் கனமழை கொட்டிய நிலையில், இப்போது மீண்டும் அதே நாளில் மழை பெய்திருக்கிறது. திடீர் மழையால் வெப்பம் குறைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் குறைந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+