வடகிழக்கு பருவமழை.. ஆரம்பிக்கும் முன்பே அமர்களம்.. 15 மாவட்டங்களில் இன்று வெளுக்க போகும் கனமழை
சென்னை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகள் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். அதேநேரம் அக்டோபர் மாதம் முழுவதுமே பரவலாக மழை இருக்கும்.. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இருக்கிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதேபோல் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இருக்கிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் நிலவும் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து புயலாக மாறுமா? என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் . நாளை (சனிக்கிழமை) வங்கக்கடலில் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகுவதற்கான சாதகமான சூழலும் உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ய உள்ள சூழலில், சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் அதிகளவில் இருக்கிறது. அந்தவகையில் இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (சனிக்கிழமை) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் அக்டோபர் 14-ந்தேதி (திங்கட்கிழமை) திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த மழைக்கு பின்னருக்கும் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. அரபிக்கடல், வங்கக்கடலில் அடுத்தடுத்து நிலவும் நிகழ்வுகளை பொறுத்து, வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், கோவை மக்கினம்பட்டி 12 செ.மீ., மாதவரம் 9 செ.மீ., நிலக்கோட்டை, பொள்ளாச்சி, உத்தரமேரூர், அடையார், விழுப்புரம், கன்னடயன் அணைக்கட்டு தலா 7 செ.மீ., வில்லிவாக்கம், பெரம்பூர், பாலாறு அணைக்கட்டு, புழல், சூலூர், சோலையார், கொளத்தூர் தலா 6 செ.மீ. உள்பட அனேக இடங்களில் மழை பெய்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications