டிட்வா புயல்.. கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி, பாம்பன், கடலூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களிலும் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 2ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வரும் டிட்வா புடல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 430 கிமீ தூரத்தில் மையமிட்டுள்ள டிட்வா புயல், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாளை அதிகாலை டிட்வா புயல் வடதமிழகம், புதுச்சேரி கடற்கரையை அடையும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த புயல் நெருங்கி வரும் சூழலில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால், சாமானிய மக்கள் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வழக்கமாக புயல் உருவாகி கடலோரப் பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும் போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். மொத்தமாக 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு விளக்கம் இருக்கின்றன.
பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளும், இரவில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்படும். அந்த வகையில் கடலூர் துறைமுகத்தில் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 4ஆம் எண் கொண்ட புயல் எச்சர்க்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து மற்றும் மோசமான வானிலை நிலவுவதை குறிக்கிறது.
இதேபோல் பாண்டிச்சேரி துறைமுகத்திலும் 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையில் 2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது புயல் உருவாகி இருப்பதை எச்சரிக்கை செய்வதற்காக ஏற்றப்படுவதாகும். இந்த எச்சரிக்கை வந்தால், துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.
அதேபோல் தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்றே 4ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களிலும் இதே நிலைதான் உள்ளன. இதனால் அதிகளவிலான மழை பெய்வதோடு சில பாதிப்புகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications