இதை கட்டாயம் நோட் பண்ணுங்க.. பெஞ்சல் புயலால் தொடர் மழை.. அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னை: ஃபெஞ்சல் புயல் (Fengal) இன்று ஆட்டம் காட்டும் நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம். அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் (ஃபெங்கல்) இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும் போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் ரெட் அலர்ட் எனப்படும் அதி கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி , புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக மீட்பு உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை தொடர்பான புகார்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்.
சென்னை - மழை தொடர்பான புகார்களுக்கு...
1070 (மாநில உதவி எண்)
1077 (மாவட்ட உதவி எண்)
94458 69848 (வாட்ஸ்அப்)
செங்கல்பட்டு மாவட்டம்:
மாவட்ட உதவி எண்: 1077
தொலைபேசி எண்கள்: 044-27427412 & 044- 27427414
வாட்ஸ் அப்: 94442 72345
கடலூர் மாவட்டம்:
மாவட்ட உதவி எண் 1077
தொலைபேசி எண்: 04142 – 220700
வாட்ஸ்ஆப் எண்: 94899 30520
சென்னை மெட்ரோ ரயில் அவசர உதவிக்கு 1860-425-1515












Click it and Unblock the Notifications