Cyclone Fengal: சென்னை, புறநகர் பகுதிகளில் நகைக் கடைகளுக்கு விடுமுறை!
சென்னை: சென்னையில் நகைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக இன்று நகைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் பெஞ்சல் (பெங்கல்) புயலானது சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகலஸ் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கட்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. பயங்கர காற்றும் வீசி வருகிறது.
பெஞ்சல் புயல் சென்னையை நெருங்கி வருவதால் தரைக்காற்றானது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. இந்த புயல் மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதன் வேகத்தை அதிகரித்துள்ளது.
இந்த புயலானது நேற்று மாலை வலுப்பெற்றது. இந்த புயலால் கடற்கரைகளில் சீற்றம் அதிகரித்துள்ளது. கடல் நீரும் பல்வேறு இடங்களில் புகுந்துவிட்டது. கடற்கரை, கேளிக்கை நிகழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் மேடான பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நகைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் புறநகர் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.
சென்னையில் நவம்பர் 29-ஆம் தேதி நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்தது. இதனால் சவரன் ரூ 57,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications