Fengal cyclone: பெஞ்சல் புயல் கரையை கடக்க ‘லேட்’ ஆகுமா? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கொடுத்த அப்டேட்
சென்னை: ஃபெஞ்சல் (Fengal) புயல் கரையை கடப்பதற்கு தாமதமாகும் என்றும், இன்று இரவு 7 மணி அளவில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் துவங்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலின் 7 மணி நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

இந்தப் புயல் தொடர்ந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (30.11.2024) இரவு 7 மணிக்கு சென்னை மற்றும் புதுச்சேரி இடையே மரக்காணம்/ மகாபலிபுரத்தை மையமாக வைத்து கரையை கடக்கத் துவங்கும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை முதல் அதி கனமழையும், குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தரைக் காற்றின் வேகமும், மழைப்பொழிவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் படிப்படியாக அதிகரிக்கும். இன்று காலை 10 மணி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் படிப்படியாக மழை துவங்கும். சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
தீவிர மழையை ஏற்படுத்தக்கூடிய மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு சில இடங்களில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, ஃபெஞ்சல் புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மாமல்லபுரத்திற்கு இடையே புயலை கடக்கும். படிப்படியாக தீவிர மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், பகல் நேரத்தில் அதிக மழையை கொடுக்கக்கூடியதாக இந்த புயல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications