வெளுக்கும் பெஞ்சல் புயல்: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல் (Fengal) காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்துடன் பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

cyclone fengal schools

9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்: அதேபோல புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, திருவாரூர்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பட்டியல்:

சென்னை

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

கடலூர்

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

மயிலாடுதுறை

ராணிப்பேட்டை

தஞ்சாவூர் (கும்பகோணம், திருவிடைமருதூர் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

புதுச்சேரி

காரைக்கால்

சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை இன்று வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+