ஆந்திராவை தாக்கும் மிக்ஜாம் புயல்! ஃபுல்போர்சில் ரெடியாக 'ஜெகன்' அரசு- இப்பவே நிதி உதவி அறிவிப்பு!
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே பாபட்லா கடலோரத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் கரையை கடக்கிறது வங்க கடலில் ஆக்ரோஷம் காட்டி வரும் மிக்ஜாம் புயல். இதனை எதிர்கொள்ள அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முழு வீச்சில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
வங்க கடலில் நகர்ந்து வரும் மிக்ஜாம் புயல் சென்னை மாநகரையும் புறநகர் பகுதிகளையும் மிக மோசமாக பாதித்துவிட்டது. சென்னை மாநகர், புறநகர்களில் கடந்த 35 மணிநேரத்தில் 40 செ.மீக்கும் அதிகமான பேய்மழையை கொட்டித் தீர்த்துவிட்டது ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டது மிக்ஜாம் புயல். இப்புயல் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே பாபட்லா அருகே கரையை கடக்க உள்ளது.

இதனையடுது மிக்ஜாம் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒட்டுமொத்த மாநில நிர்வாகத்தையும் களமிறக்கி உள்ளார். மிக்ஜாம் புயல் பாதிக்கும் மாவட்டங்கள் அனைத்துக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீட்பு நடவடிக்கைக்கும் தலா ரூ2 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு அதிகாரிகள் உதவியுடன் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேவைப்படும் கூடுதல் நிதியை உடனே வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. முந்தைய புயல் கால நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட அதிகாரிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: District officials are on high alert as #CycloneMichuang is anticipated to make landfall between Nellore and Machilipatnam, prompting a series of precautionary measures across the region
— ANI (@ANI) December 4, 2023
(Visuals from Vijayawada) pic.twitter.com/IG4bBm6gj7
புயல் பாதிக்கப் போகும் 10 மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளான நெல்லையும் கொள்முதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 308 முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து தேசிய பேரிடர் மீட்பு படைகள் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்களில் இருந்து வீடுகள் திரும்பும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ2,500 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு தலா ரூ1,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் 25 கிலோ அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
திருப்பதி விமான நிலையம் ஏற்கனவே விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. கபிலதீர்த்தம் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications