சென்னைக்கு ‛அலர்ட் மெசேஜ்’.. அடுத்த 2 நாட்கள் மழை எச்சரிக்கை! ‛டானா புயல்’ எபெக்ட் எப்படி இருக்கும்?
சென்னை: வங்கக்கடலில் ‛டானா' புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை எப்படி இருக்கும்? என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் விளக்கி உள்ளார்.
வங்கக்கடலில் டானா புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் 25ம் தேதி காலையில் ஒடிசா மாநிலம் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் இடங்களுக்கு மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு புயல் பாதிப்பில் மக்களை காப்பாற்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் கூட சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்த புயலுக்கு ‛டானா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 24ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை இரவு முதல் 25ம் தேதி காலைக்குள் ஒடிசா மாநிலம் பூரிக்கும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும்.
இப்புயல் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வங்கக்கடலின் வடபகுதியிலும் கடல் கொந்தளிப்பாகவும், சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளை எடுத்து கொண்டால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. 12 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 9 சென்டிமீட்டர் மழை என்பது பதிவாகி இருக்கிறது. வானிலை முன்னறிவிப்புகளை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழையை பொறுத்தவரை நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,சேலம், உள்ளிட்ட வடஉள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications