90 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் பெஞ்ஜல் புயல் .. சென்னை டூ புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட்
சென்னை: தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதால் அதற்கு 'பெஞ்ஜல்' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைகடக்கும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 23-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் அதன் பின்னர் தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. ஆனால் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தமிழக பகுதிகளை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த 27-ந் தேதி இதுபுயலாக மாறும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது மெதுவாக கடல் பகுதியில் நகர்ந்தபடியே இருந்தது.

அன்றைய தினம் அது புயலாக மாறவில்லை. புயலும் இல்லை.. ஒன்றும் இல்லை.. கிளம்புங்க.. வேலையை பாருங்கப்பா என்று எல்லாருக்கும் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. தீவிர தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் இரவில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் அமைப்பு மேலும் வலுவடையத் தொடங்கியது.
டெல்டாவை நோக்கி போக வேண்டிய புயல் அப்படியே ஒரு சின்ன வளைவு வளைந்து அப்படியே பாண்டிச்சேரியை நோக்கி திரும்பியது.. மெல்ல மெல்ல நகர தொடங்கியது. அதன் பின்னர் தடையாக இருந்த காரணிகள் எல்லாம் விலகிதால், நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'பெஞ்ஜல்' என பெயரிடப்பட்டு உள்ளது. முதலில் ஃபெங்கல் புயல் என்றே கூறினார்கள். ஆனால் சவுதி அரேபியா பரிந்துரைத்த பெயர் பெஞ்ஜல் என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது.
ரெட் அலர்ட்: நேற்று புயலாக உருவெடுத்த நிலையில், வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் காரைக்கால்-மாமல்லபுரத்தை மையமாக வைத்து புதுச்சேரி அருகில் கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பதிவாகக்கூடும் என்று அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இந்த ஏழு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
வேலூரில் வெளுக்க போகும் மழை: இதுதவிர, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது,
கோவையில் கனமழை : தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் நாளை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை மாவட்டங்களில் கன மழையும், நாளை மறுநாளும், அதற்கு அடுத்த நாளும் (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
90 கிமீ வேகத்தில் புயல் காற்று: புயல் இன்று கரையைக் கடக்கக்கூடும் என்பதால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சூறாவளிக் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக சொல்வது என்றால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரையிலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இதேபோல் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications