பெங்கல் புயலால் கனமழை இருக்கு.. சென்னை முதல் புதுச்சேரி வரை நாளை முக்கிய நாள் - வெதர்மேன்
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் முதல் புதுச்சேரி வரை நாளை முக்கியமான நாள் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று என்பது வீச உள்ளது.

அதோடு அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அதிதீவிர மேகங்கள் புயல் மையம் கொண்டுள்ள பகுதியில் திரள்கின்றன. இதனால் சென்னை மீது முதல் மழை மேகங்கள் வருகிறது. இது அதிக மழை மேகங்களை உருவாக்கும். அதன்பிறகு இடைவெளி விட்டு மழை மேகங்கள் உருவாக உள்ளது.

இந்த புயல் பாண்டிச்சேரி - சென்னை இடையே நாளை கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னையில் மழையை கொடுக்க வாய்ப்புள்ளது. அதேவேயைில் நல்ல மழை பெய்ய சென்னையின் தெற்கு பகுதியில் புயல் கடக்க வேண்டும். நாளை காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் முதல் பாண்டி பெல்ட்டுகளுக்கு முக்கியமான நாள்'' என தெரிவித்துள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications