செக்கச்சிவப்பாக.. பெஞ்சல் புயலின் கண் எப்படி இருக்கு? வங்கக்கடலில் சம்பவம்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: செக்கச்சிவப்பாக வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் பெஞ்சல் புயலின் கண் எப்படி இருக்கும் என்று இங்கே குறிப்பிடப்பட்டு உள்ள புகைப்படத்தில் விளக்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். புதுச்சேரிக்கு 120 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல். ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது

தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நல்ல மழை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மழைக்கு இடையே சென்னைக்கு ஒரே ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது.
அதன்படி சென்னை மாநகருக்கு தேவையான மழை நீர் கிடைத்துள்ளது. நகரின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 4 மணி நேரத்தில் நீர்வரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 3,645 mcft இல் தற்போதைய அளவு 2,313 mcft ஆக உள்ளது. இதனால் சென்னையில் தண்ணீர் பஞ்சம் அடுத்த வருடம் இருக்காது. நேற்று வரை இருந்த தண்ணீர் பஞ்சம் அபாயம் இனி இருக்காது.
எவ்வளவு மழை: சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவு. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலையில் போடப்பட்டிருக்கும் இரும்பு தடுப்புகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சென்னை மழைக்கு இடையே 4 மணி நேரத்தில் 8 மடங்காக நீர் வரத்து கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,200 கன அடி அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அருகே: செக்கச்சிவப்பாக வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் பெஞ்சல் புயலின் கண் எப்படி இருக்கும் என்று இங்கே குறிப்பிடப்பட்டு உள்ள புகைப்படத்தில் விளக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு அருகே உள்ள புயலின் கண் விளக்கப்பட்டு உள்ளது. இது வலிமையற்ற புயல் என்பதால் அதன் கண் வலிமையாக இல்லை.
இந்த நொடி , பெஞ்சல் புயலின் கண் சென்னைக்கு கிட்டத்தட்ட 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கரையை நோக்கி நகரும் வேகம் மெதுவாகவே இருக்கும் எனவும் தெரிவிப்பு கடந்த 6 மணி நேரத்தில் நகரும் வேகம், மணிக்கு 13 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ ஆக குறைந்தது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடைவிடாத கனமழை நீடிக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications