ஸ்பாட் இது தான்.. ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியது.. சென்னை வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும், அடுத்த 3 - 4 மணி நேரத்தில் புயல் முழுவதும் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து இருந்தார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று பிற்பகலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் மெதுவாக நகர்வதால் நள்ளிரவு அல்லது நாளை காலையில் தான் புயல் கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

cyclone fengal weather chennai rains

இத்தகைய சூழலில் தான் பெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணிக்கே கரையை தொட்டுவிட்டதாகவும், புயலின் முன் பகுதி கரையை தொட்டுவிட்டதாகவும், அடுத்த 3 - 4 மணி நேரத்திற்குள் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என்று கணிக்கபடுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று சென்னையில் 3.15 மணிக்கு தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெஞ்சல் புயல் தற்பொழுது புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது நகர்ந்து வருகிறது. பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது

பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்க கூடும். புயல் கரையை கடக்கும்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்

நாளை விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கையை பொறுத்தமட்டில் புயல் இன்று கரையை கடக்கும்போது திருவள்ளூர் தொடங்கி மயிலாடுதுறை வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். அதையொட்டிய மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோமீட்டரிலும், அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் இருக்கும்.

நாளை திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+