இடி + மின்னலுடன் மழை.. அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் கொட்டும் மழை.. உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் பருவமழை தொடங்கவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை உள்மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மாறாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தற்போது அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்கிறது.
கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை, திரப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் கனமழையின் காரணமாக இன்று கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications