சென்னையை சூழ்ந்த பனி.. அரபிக்கடலில் சம்பவம்.. 18 மாவட்டங்களும் ரெடியா இருங்க.. கொட்டப்போகுது பெருமழை
சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி வருகிறது.. இதனால், மாநிலம் முழுதும், பல்வேறு இடங்களில், மிதமான அளவுக்கு மழை பெய்து வருகிறது.. இதனிடையே, மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கினர்.

பொதுமக்கள்: சென்னையில், பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரும் தவிப்பிற்கு ஆளாகிவிட்டனர். இன்னும் நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் முழுமையாக முடியவில்லை.. கடந்த 2 நாட்களாகவே மழை ஓரளவு ஓய்ந்த நிலையில், மெல்ல மெல்ல சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தது..
மீண்டும் மழை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் வாரம் முழுவதுமே பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மீண்டும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அந்த அறிவிப்பில்,"தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் 10, 11-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 12, 13, 14, 15-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மழை: இன்றைய தினம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
அறிவிப்பு: டிசம்பர் 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பில்லூர் அணை ஆகிய இடங்களில் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி எஸ்டேட், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனி: சென்னையை பொறுத்தவரை, இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது... இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். புறநகரில் காலை முதலே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும், காலை முதல் கடும் பனிமூட்டத்துடன் மிதமான மழைபெய்து வந்ததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது. தற்போது, வளசரவாக்கம், போரூர், வடபழனி பகுதிகளில் லேசாக தூறல் பெய்து வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications