இது கொடுமை.. வயநாடு உட்பட 5 மாவட்டங்களுக்கு தீவிர மழைக்கான ரெட் அலர்ட்.. மீட்பு பணி நிலைமை?
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வயநாடு சூரல்மலை நிலச்சரிவுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வயநாடு சூரல்மலைப் பகுதிகளில் அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி இருக்கும் நிலையில் பெருவெள்ளத்துக்கு இடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவின் பல பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டியது.

கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் பல பகுதிகளில் நேற்று காலை முதலே லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வயநாடு சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவுகளுடன் காட்டாற்று வெள்ளமும் பாய்ந்தோடியதால் பொதுமக்களின் குடியிருப்புகளை மிக மோசமாக பாதித்தது. பள்ளிக்கூட முகாம்களில் தங்கியிருந்தவர்களும் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அத்துடன் முண்டகக்கை பகுதியில் போக்குவரத்துக்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து ராணுவ வீரர்களும் விமானப் படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி தவிக்கின்றனர். இன்னமும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு உதவ தயார் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் என சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையத்தின் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையால் நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் மற்றும் நிலச்சரிவில் சிக்கியோர் கதி என்ன ஆகுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications