சம்பவம் லோடிங்.. வாழ வைக்குமா வடகிழக்கு பருவமழை? 16க்கு அப்பறம் பாருங்க! டெல்டா வெதர்மேன் கணிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததும் சில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வானம் வறண்டு காணப்பட்டது. இதனால் இந்தாண்டு பருவமழை பலவீனமானதா? என்ற கேள்வி எழுந்தது. நவம்பரின் இரண்டாவது பாதியில் அதாவது நவம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு மழை பெருமளவில் பெய்ய வாய்ப்புள்ளது என சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும்.

அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது. ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லலாம்.
வடகிழக்கு பருவமழை
இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை மிகக் குறைவாகவே இருக்குமோ என பொதுமக்கள் கவலை அடைந்தனர். ஆனால் மழை குறைந்தது பற்றி கவலைப்பட தேவையில்லை என நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பேசி உள்ள சுயாதீன வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்திரன், வடகிழக்கு பருவமழையின் போது சில நாட்கள் மழை குறைவது சாதாரண விஷயம் தான். இந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் பலம் பெற்று மழை பெய்யும்.
தமிழ்நாடு மழை
நவம்பரின் இரண்டாவது பாதி பருவமழைக்கு மிகச்சிறந்த சூழ்நிலை கொண்டுள்ளது. வரும் வாரங்களில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட மழை பற்றாக்குறை இரண்டாம் பாதியில் சரியாகி விடும். சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் சராசரியாக 11 நாட்களுக்கு மழை இருக்கும். நுங்கம்பாக்கம் பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யும். இம்முறை வரவிருக்கும் வானிலை மாற்றங்கள் அந்த இலக்கை எளிதாக அடையச் செய்யும்." என்றார்.
சென்னை கனமழை
"MJO" எனப்படும் மேடன்-ஜூலியன் ஒசிலேஷன் பற்றியு கவலைப்பட தேவையில்லை. நவம்பர் 22க்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் புதிய MJO அலை உருவாகும். இது பருவமழைக்கு மீண்டும் சக்தி அளிக்கும். வடகிழக்கு காற்று முழுமையாக வந்தடைந்துள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் தென்கிழக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை மீண்டும் துவங்கும். நவம்பர் 15 முதல் 20 வரை, கிழக்கத்திய அலையுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இதன் விளைவாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் பரவலான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பருவமழை கணிப்பு
அதனைத் தொடர்ந்து நவம்பர் 21 முதல் டிசம்பர் 3 வரை, தெற்கு வங்கக்கடலில் இரண்டு வானிலைச் சலனங்கள் உருவாகும் எனவும், அவை மாநிலத்தின் தென்பகுதிகளுக்கு தொடர்ந்து மழை கொடுக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கவலையின்றி இருங்கள். நவம்பரின் இரண்டாவது பாதி கண்டிப்பாக மழைக் கொடுக்கும். இந்தாண்டு பருவமழை நம்மை ஏமாற்றாது என உற்சாகமாக கூறுகின்றனர் வானிலை ஆய்வாளர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications