சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் பெஞ்ஜல் புயல்.. கரையை நடக்கும் போது எப்படி இருக்கும்?
சென்னை: தமிழ்நாட்டை நெருங்கி வரும் பெஞ்ஜல் புயல் இப்போது எங்கு மையம் கொண்டுள்ளது என்பதையும், அந்த புயல் கரையை கடக்கும் போது எப்படி இருக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். இந்த புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான பெஞ்சல் புயல் (ஃபெங்கல்) சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த புயல் இன்று ( நவம்பர் 30ஆம் தேதி ) பிற்பகலில் மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் சூறாவளி புயலாக மாறி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி இடையே கடற்கரையை கடக்கும்" என்று கணித்துள்ளது.

இதனிடையே காலை 6 மணி நிலவரப்படி புயல் புதுச்சேரியில் இருந்து சரியாக 180 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் பெஞ்சல் புயல் இருப்பதாகவும் புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல் நெருங்கும் போதும், புயல் கரையை கடக்கும் போதும், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர விழுப்புரம் மாவட்ட மக்கள் தயவு செய்து வெளியே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுமார் 190 தொலைவில் பெஞ்சல் புயல் இருக்கும் நிலையில், அதன் அடர்த்தியான மழை மேகங்கள் இன்னும் நமது கடற்கரையைத் தொடவில்லை என்றும் சூறாவளி சென்னை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதே நேரத்தில் வேகமாக தீவிரமடைந்து வருகிறதும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சென்னையை நெருங்கும் போது, மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
பெஞ்ஜல் புயல் கரையை கடக்கும்போது பாதிப்புகள் அதிகமாகவே இருக்கும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் மழை அதிகமாக காணப்படும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புயல் கரையேறும்போது மேலும் வலுவடைந்து, தீவிர புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், மேலும் கரையை கடக்கும் போது சில மணி நேரங்கள் நின்று கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறினார்.
மேலும் அவர்கூறும் போது, புயல் கரையை கடக்கும் நேரத்தில் கரையை கடக்கும் பகுதிகளில் அதி கனமழையும், குறுகிய நேரத்தில் பெருமழையும் பதிவாகும். அதாவது 30 முதல் 35 செ.மீ. வரை மழை இருக்கும். சென்னை முதல் விழுப்புரம் வரையிலான பகுதிகளில் உள்ள மக்கள் புயல் கரையை கடக்கும் வரை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்று எச்சரித்தார்.
மேலும் ழ்வான மற்றும் நீர்நிலைகள் அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தவேண்டாம் என்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படலாம் என்றும் எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வைப்பது அவசியம் என்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தண்ணீர் தேங்கும் என்பதால் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் ஹேமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications