தீவிரமாகும் வெப்பஅலை.. கடும் வெயிலை எதிர்கொள்ள ரெடியா இருங்க.. வட உள் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், வெப்பம் இன்னும் குறையவில்லை. இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.

தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மழை வெயிலின் தீவிரத்தை குறைக்கவில்லை. தென் மாவட்டங்களுக்கு நேர் எதிராக வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. தேசிய அளவில் அதிக வெயில் பதிவான முதல் மூன்று இடங்களில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதாவது தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி, அதாவது 108 டிகிரி வரை, 26, 27, 28-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 7 டிகிரி வரை, அதாவது 106 டிகிரி வரை உயரக்கூடும். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, தருமபுரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, சென்னை விமான நிலையம், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications