'ஈரோடு' இல்ல.. 'ஈரமே இல்லாத காடுனு' மாத்திடுங்க! 108 டிகிரி கொளுத்திய வெயில்.. புலம்பும் மக்கள்!
சென்னை: தமிழகத்தில் வழக்கம் போல இன்றும் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி சுட்டெரித்திருக்கிறது.
பொதுவாக எல்-நினோ ஆண்டில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், எல்-நினோ முடிந்து அடுத்த ஆண்டும் வெப்பம் கடுமையாக இருப்பதுண்டு. கடந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பு இருந்தது. எனவே வெப்பம் அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் வெயில் தீவிரமாக இருந்ததால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னையில் 15-16 நாட்கள் 104 டிகிரி ஃபாரான்ஹீட் வெயில் இருந்ததை நாம் பார்த்திருந்தோம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த ஆண்டு வெப்பச்சலன மழை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல் மாத காலங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தலை காட்டியிருந்தாலும், போதுமான அளவு பெய்யவில்லை. இப்படியாக மழை குறைவு மற்றும் எல்-நினோ பாதிப்பு முடிவின் அடுத்த ஆண்டு என்கிற காரணத்தினாலும் தமிழகத்தில் வெயில் பொளந்துக்கட்டி வருகிறது.
இப்போதே இந்த அளவுக்கு வெயில் இருக்கிறது எனில், கத்திரி வெயில் எப்படி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கத்திரி வெயில் என்பது மே மாதம் 4ம் தொடங்கி அந்த மாதம் 28ல் முடிந்துவிடும். இந்த நாட்களில் வழக்கமாக வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் கடந்த பின்னரும் கூட ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது. தென் மாவட்டங்களை இந்த வெயில் ஒரு கை பார்த்திருந்தது.
இப்படி இருக்கையில், இன்று தமிழகத்தில் வெயில் 15 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டை கடந்திருக்கிறது. அதிகபட்சமாக
ஈரோட்டில் 108 டிகிரி பதிவாகியுள்ளது.
திருப்பத்தூர் மற்றும் தருமபுரியில் 106,
வேலூர் மற்றும் திருத்தணியில் 105,
சேலம் மற்றும் கரூர் பரமத்தியில் 104,
மதுரை விமான நிலையம் 103,
மதுரை நகரம் 102,
கோவை, திருச்சி, நாமக்கல்லில் 102,
சென்னை மீனம்பாக்கத்தில் 101,
தஞ்சையில் 100,
பாளையங்கோட்டையில் ஏறத்தாழ 100 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் பதிவாகியுள்ளது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், தமிழகத்திற்கு மே 1ம் தேதி வரை வெயில் குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். அதேபோல, தென் மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். அடுத்த 4 நாட்களுக்கும் வானிலை இப்படித்தான் இருக்கும். 5வது நாள், அதாவது மே 2ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும். இதே வட உள் மாவட்டங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். அதாவது உள் மாவட்டங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும். மற்ற பகுதிகளில் 95-102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.
வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்.30ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக வெப்ப அலை வீசும். எனவே வெப்ப அலை குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மே.1ம் தேதி தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை குறித்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிக்கிறது” என கூறப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications