இனி ஒரு வாரம் பிரேக்.. சென்னையில் இன்றோடு விடைபெறும் மழை! பிற இடங்கள் எப்படி? வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னையில் இன்றுடன் (நவம்பர் 17) மழை விடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த ஒருவாரத்துக்கும் மேலாக மழை பிரேக் எடுக்க உள்ளது என்றும், தமிழகத்தில் பிற இடங்களில் மழை நிலவரம் என்ன? என்பது பற்றியும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கனமழை என்பது பெய்து வருகிறது.

குறிப்பாக பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் நேற்று இரவு கூட பல இடங்களில் கனமழை பெய்தது இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றுடன் காலை அல்லது மதியம் மழை பெய்யும். அதன்பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை, செங்கல்பட்டுக்கான இறுதிக்கட்ட மழை என்பது நவம்பர் 17 ம் தேதி காலை/மதியம் இருக்கும். அதன்பிறகு ஒருவாரத்துக்கு மேலாக மழை பிரேக் எடுக்கிறது. அதேவேளையில் டெல்டா மற்றம் தென் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும். கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்களை பொறத்தவரை டெல்டா மற்றும் தென்தமிழகத்தில் மழை தொடரும். ஞாயிற்றுக்கிழமையில் (அதாவது இன்று) மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மழை பெற உள்ளது.
மழைக்காலம் என்பது இன்னும் முடியவில்லை. இன்னும் மழைக்காலம் உள்ளது. எம்ஜேஓ காரணமாக இன்னும் நமது பகுதிகளில் மழை என்பது இருக்கிறது. இந்த மாத இறுதியில் தமிழ்நாட்டை நோக்கி சக்கரம் ஒன்று வருகிறது. இந்த சக்கரத்தின் வீரியம் என்ன? இந்த சக்கரத்துக்கு பெயர் வைக்கப்படுகிறதா? என்பதை கூற நாம் இன்னும் 10 முதல் 12 நாட்கள் கணிக்க வேண்டி உள்ளது'' என்று கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications