3-வது முறையாக தாமதம்.. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது எப்போது? வானிலை மையம் அப்டேட்
சென்னை: இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்த நிலையில், அடுத்த 36 மணி நேரத்திற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3வது முறையாக தாமதம் ஏற்பட்டுள்ளது. மியான்மர் கடல் பகுதியில் உள்ள காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்வதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இன்று நாகை, மயிலாடுதுறை, கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த இரண்டு நாட்களாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து வந்தது. ஆனால் கடந்த 3 முறையும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. 7 மற்றும் 8 ஆம் தேதிக்குள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமல் தாமதமானது. தொடர்ந்து 9 மற்றும் 10 ஆம் தேதிக்குள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமல் தாமதமானது.
இரண்டு முறை தாமதமான நிலையில் இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதாவது மியான்மர் கடல் பகுதியில் உள்ள காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்வதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை மூன்றாவது முறையாக தாமதமாகியுள்ளதாக கூறியுள்ள்து.
இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருந்த நிலையில், அடுத்த 36 மணி நேரத்திற்குள் அதாவது 11 மற்றும் 12 ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்கள் மழைக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
இன்று தமிழகத்தில் நாகை, மயிலாடுதுறை, கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை மையம் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாளை தமிழத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
13 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 14 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
15 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications