வரலாறு பார்க்காத மழை.. வங்க கடலில் மாற்றம்.. திணறிய மகாராஷ்டிரா.. மும்பையை பாதித்த போக்குவரத்து சேவை
சென்னை: வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடக்கக் கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. இதனிடையே, மகாராஷ்டிராவில் அதி கனமழை கொட்டி வரும் சூழலில், நான்டேட் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள 200 பேரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், மும்பையில் பஸ், ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடக்கக் கூடும்.
அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு நிலை
மத்திய கிழக்கு - தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியிலும், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை மழை பெய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பாலுள்ள மத்திய கிழக்கு - தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வங்கக்கடல் காற்றழுத்த பகுதி
இதனிடையே, ஆந்திர மாநிலம் அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை கொட்டி வருவதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
2 பேர் பலி - திணறிய மும்பை
மகாராஷ்டிராவில் கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நேற்றைய தினம் விடுக்கப்பட்டது.. மும்பை, தானே, ராய்காட் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் அதி கனமழை கொட்டி வரும் சூழலில், நான்டேட் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள 200 பேரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால்,மும்பை, தானே, நான்டேட், லத்துார், பிதார் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையே மாறியிருக்கிறது.. அதிலும் மும்பையில் பஸ், ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் - ரெட் அலர்ட்
மும்பையில் நேற்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை 17 செ.மீ., மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிட்டது.. அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டதையடுத்து, அவசியமின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.. இடைவிடாது பெய்த மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
இதனால் மாணவர்கள் பலர் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். மாதுங்கா பகுதியில் குழந்தைகளுடன் வீடு திரும்பிய பள்ளி பேருந்து ஒன்று, மழை வெள்ளத்தில் சிக்கிவிட்டதால், விரைந்து சென்ற போலீசார், குழந்தைகளை தங்கள் முதுகில் சுமந்தபடி பாதுகாப்பாக மீட்டனர்..
மழை வெள்ளம் காரணமாக ஆங்காங்கே பஸ்கள் பழுதாகி நின்றன. இருப்புப் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், புறநகர் ரயில் சேவைகள் முடங்கின... தேங்கிய நீர் அகற்றப்பட்டாலும், ரயில் சேவை மெதுவாக இயங்குகிறது..
மும்பை ஏர்போர்ட் - 5 பேர் மாயம்
மும்பை ஏர்போர்ட்டின் ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கியதால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் வானில் வட்டமிட்டபடி இருந்தன.. பிறகு, அருகிலிருந்த விமான நிலையங்களுக்கு அந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
மும்பையில் இருந்து, 600 கிமீ தூரத்திலுள்ள நான்டேட் மாவட்டத்தில், மழை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, 200க்கும் மேற்பட்டோர் வெள்ள நீரில் சிக்கவிட்டனர்.. இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் இறங்கியிருஉக்கிறார்கள். ராவண்கோன், ஹஸ்னால் கிராமங்களில் 5 பேரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணியும் நடக்கிறது..
தொடர்ந்து கனமழை பெய்வதாலும், மாநகரம் முழுவதும் தண்ணீர் தேங்குவதாலும், அத்தியாவசிய தேவைகள் தவிர, மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முதல்வர் வேண்டுகோள்
இதனிடையே, மழை வெள்ள சேதங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட்ட முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ''வெள்ள நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகாம்களில் தங்கியுள்ளோருக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழை மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications