வங்க கடலில் 21ல் புதிய காற்றழுத்தம்! தீபாவளிக்கு சொந்த ஊரிலிருந்து ஊர் திரும்புவோர் கவனம்- தமிழக அரசு
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வரும் 21 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவோர் கவனத்துடன் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசு தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி 40 இடங்களில் கனமழையும் 5 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 செ.மீ. மழையும் தேனி மாவட்டம் தேக்கடி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலா 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.
இதன் காரணமாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு உருவானது.
இது, நேற்று காலை 8:30 மணியளவில், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த, 12 மணி நேரத்தில் இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வரும் 21ம் தேதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும்.
இதனால், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 21ம் தேதி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடுதுறை, நாகை, மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கன மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 22, 23ம் தேதிகளில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 23ம் தேதி, வேலுார் மாவட்டத்தில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 24ல், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சூறைக்காற்று வீசும் என்பதால், தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு, வரும் 22ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, அந்தமான் கடல் பகுதிகளுக்கு, 21ம் தேதி வரை செல்ல வேண்டாம். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு, 22ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வரும் 24 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே 21 ஆம் தேதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications