உருவாகிறது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று, நாளை மட்டுமல்ல.. ஒரு வாரத்துக்கு மழை
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழலே நிலவும் என ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. இந்நிலையில், வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் எந்தெந்த இடங்களில் வெப்பச்சலன மழை தொடரும், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் நேற்றைய தினம் மழை பெய்திருக்கிறது.. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது... நாமக்கல், கன்னியாகுமரி, சேலம், கோவை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது.

வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் அதாவது செவ்வாய்க்கிழமையும், நாளையும் புதன்கிழமையும் வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழலே நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 2ம் தேதி முதல் மீண்டும் வெப்பச் சலன மழை தொடரும் என்றும், வருகிற 7ந் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 2, 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மற்றும்,
காற்றழுத்த தாழ்வு பகுதி
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாலை, இரவு அல்லது நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழை தீவிரம் அடைந்து மழைப்பொழிவை கொடுக்கும், இதேபோல் புதுச்சேரியிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம் பகுதியில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், 4 செமீ மழையும், இதற்கு அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, செருமுள்ளி, சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை போன்ற இடங்களில் தலா, 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5ம் தேதி வரை மழை
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், இன்று ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, மத்திய வங்கக் கடலில், வடக்கு அந்தமான் கடல் பகுதியில், நாளை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அக்டோபர் 5 வரை மிதமான மழை தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications