சென்னை வெள்ளம் சூழ், வெப்பம் சூழ்ந்த நகரமாக இருக்கும்.. எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் இன்று அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை நிரந்தரமாக வெள்ளம் சூழ், வெப்பம் சூழ் நகரமாக மாறிவிடும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் சென்னை மக்களுக்கு படிப்பினையை கொடுத்தது. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளாக சென்னையை மழை வெள்ளம் பதம் பார்த்துதான் வருகிறது. இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் சென்னை குறித்த பகீர் எச்சரிக்கையை பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதாவது,

"சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு, இங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே முதன்மையான காரணம் என 'நீரி' உள்ளிட்ட அமைப்புகள் செய்த ஆய்வறிக்கை சொல்கிறது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் நீர்தேங்காமல் ஓடிச் செல்வது (run off water) அதிகமாகி சென்னையில் வெள்ளம் ஏற்படுவதாக இந்த அறிக்கை சொல்கிறது. அதுவும் 2015சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் இந்த ஆக்கிரமிப்பு அதிகமாக தொடர்வதாகவும் இந்த ஆண்டும் இது அதிகரிக்கும் என்று சொல்கிறது.
2015 ஆம் ஆண்டு 119 நீர்நிலைகளில் இருந்தது, 2020 ஆம் ஆண்டு 64ஆக குறைந்தது, இந்த ஆண்டு 62ஆக குறையும் என்று சொல்கிறது, அதாவது, 101 சது.கிமீ ஆக இருந்த நீர்நிலைகள் இப்போது 64சது.கிமீ ஆக குறைந்துள்ளது.
இப்படி நீர்நிலைகள் குறைந்துவருவதன் தாக்கத்தை சென்னை ஒவ்வொரு ஆண்டும் அனுபவித்துவருகிறது. நீர்நிலைகள் வெறும் நீரை தேக்கிவைக்கமட்டுமல்ல, நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் மட்டும் 'micro climatic conditions' என்று சொல்லக்கூடிய வகையில் அந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும், இது சென்னையை வெப்பத்திலிருந்து காப்பாற்ற உதவும்.
பரந்தூர் விமான நிலையத்தை நாங்கள் எதிர்ப்பதற்கு, மிகப்பெரிய நீர்நிலைகளை அழித்து உருவாக்க முயல்வது ஒரு முக்கியமான காரணம். இந்த 13 நீர் நிலைகள் மட்டுமல்ல, விமான நிலையம் கொண்டுவரக்கூடிய "வளர்ச்சி", அதவது நட்சத்திர விடுதிகள், மால்கள், அலுவலக வளாகங்கள் என் அந்த விமான நிலையத்தை சுற்றியுள்ள நீர்நிலைகள் காவு வாங்கப்படும். சென்னை நிரந்தரமாக வெள்ளம் சூழ், வெப்பம் சூழ் நகரமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே சென்னை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சுந்தரராஜனின் வார்னிங் சூழலியல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் கவனம் பெற்றிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications