விலகும் பனி.. இன்று அடுத்த ரவுண்டு மழை! நாளை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: இன்று பனிப்பொழிவு விலகி, இரவு நேரத்தில் மழைப் பொழிவு தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "கீழடுக்கு காற்று சுழற்சி தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடல் ஊடாக பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஈரப்பதமான கீழ் திசை காற்று இன்று (14.12.2023) இரவு தமிழக கடலோரத்திற்கு வருகை தருகிறது.

நாள் 1 (14.12.2023) தமிழகத்தில் நிலவி வந்த தற்காலிக பனிப் பொழிவு இன்றுடன் விலகும், பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், வெயிலும் காணப்படும். இரவு / நள்ளிரவு நேரங்களில் கடலோர தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு துவங்கும்.
நாள் 2 (15.12.2023) & நாள் 3 (16.12.2023): தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகும். கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களிலும் மிதமானது முதல் சற்றே கனமழையினை எதிர்ப்பார்க்கலாம்.
நாள் 4 (17.12.2023) & நாள் 5 (18.12.2023): தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நண்பகலில் நல்ல வெயில் இருக்கும். தென்கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும். டெல்டா & தெற்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை எதிர்ப்பார்க்கலாம்.
நாள் 6 (19.12.2023) முதல் நாள் 8 (21.12.2023) வரை: தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், மாவட்டத்தின் ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
கடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் ஒருசில இடங்களிலும் மிதமானது முதல் சற்றே கனமழையினை எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக இந்த மழைப் பொழிவு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், நீர் நிலைகள் நீர் பெருகும் அளவிற்கும், பகலை விட இரவு /அதிகாலையில் பரவலான மழைப் பொழிவாகவும் அமையும்." என்று தெரிவித்து உள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications