வறண்ட வானிலை.. காற்று வேக மாறுபாட்டால் பொளந்து கட்ட போகுது மழை.. 16ம் தேதி வரை நனைய போகுது தமிழ்நாடு
சென்னை: தமிழகத்தில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வறண்ட வானிலை காணப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணனும் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வரும்நிலையில், வறண்ட வானிலையும் நிலவி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பிலும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

காஞ்சிபுரம்: தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும்போது, "பருவமழையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தை நோக்கி வீசுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையில் இன்று வெயில் இருக்கும். மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டமால் டுமீல் மழைக்கு காத்திருக்க வேண்டும்.
அடுத்த இரு வாரங்களுக்கு வறண்ட வானிலைதான் மேற்கண்ட 4 மாவட்டங்களில் நிகழும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்யும்.
பருவமழை: நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி ஆகிய இடங்களிலும் வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் அபாயகரமானதாக இருக்காது. கேரளாவிலும் பருவமழை பெய்யும். அங்கும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அபாயங்கள் இருக்கும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் எந்த ஆபத்தும் இல்லை" என்று வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக வானிலை மையம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படுகிறது. இந்த பின்னணியில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலை, வரும் 16 வரை தொடரும்.
நீலகிரி மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி பந்தலூர் தாலுகா அலுவலகம், கிருஷ்ணகிரியில் 4 செ.மீ. மழை பதிவானது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications