அடுத்த 3 மணி நேரம்.. நாகை முதல் ராமநாதபுரம் வரை.. 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் நேற்று அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் 4 செமீ மழையும், புதுச்சேரியில் 3.2 செமீ மழையும் பதிவானது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

குறிப்பாக வரும் 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, தஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications