Red alert: சென்னைக்கு இன்று ”ரெட் அலர்ட்..” கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.. ஐஎம்டி
சென்னை: சென்னையில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், இன்றும் தமிழகத்தில் சென்னையில் அதிகனமழைக்கும், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கிய 3வது நாளே..
சென்னையில் நேற்று இரவு ஒரே நாளில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னை பாரிமுனையில் மட்டும் 35 செமீட்டருக்கு மேல் மழை கொட்டி தீர்த்துள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர்கள் மேகவெடிப்பு என கூறிய நிலையில், வானிலை ஆய்வு மையம், மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலன மேகங்களின் செயல்பாட்டால் தான் அதி கனமழை பெய்ததாக விளக்கம் அளித்து இருந்தது.
இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கிய மூன்றாவது நாளே சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில் மழை பெய்த அடையாளமே இல்லாத வகையில் தண்ணீர் முற்றிலுமாக வடிந்து இருந்தது. ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்ற மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்
நேற்று தான் இப்படி என்றால் இன்றும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதி கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதே போன்று தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications
